சினிமாவில் பேரறிஞர் அண்ணா எழுதிய ஓரே பாடல் எது தெரியுமா?… காதல் ஜோதி!

இரவு, பகல், தூக்கம், சாப்பாடு என எதையும் பார்க்காமல் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. திமுக முக்கியமாக வளர்ந்ததே, அடுக்கு மொழியும், அலங்கார வார்த்தைகளும் நிறைந்த, கவர்ச்சிகரமான மேடைப்பேச்சு மற்றும் திரைப்படங்கள் மூலம் தான் என்பது அனைவரும் அறிந்ததே. இயல், இசை, நாடகம் தமிழ் மக்களின் மூச்சாக கலந்திருக்கிறது.

இந்த மண் கொடுத்த ஈகைப்பண்பு தான் கலையால் வளர்ந்து செழிப்படைந்து மக்களை பண்பட்டவர்களாக மாற்றியுள்ளது. ஆனால், அண்ணாவின் புகழை பற்றி பேசுவதை விட அவருக்கும் சினிமாவுக்கும் இருக்கும் நெருக்கத்தை யாராலும் பிரித்து விட முடியாது. தமிழ் சினிமாவில் அரசியல் விதையை விதைத்தது அண்ணா. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவர் எம்ஜிஆர். திமுகவிற்கு சினிமா ஒரு களமாகவே இருந்தது.

கருணாநிதி நிறைய படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். ஆனால், அண்ணா கதை வசனம் என்று முழுவதுமாக பங்கேற்ற படங்கள் மூன்று தான். அவை, வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி. அண்ணாவின் சில கதைகள் படங்களாக வெளிவந்து வெற்றி வாகை சூடின. ஒரு படத்திற்கு கதையும், வசனமும் மிக முக்கியமானது அனைவரும் அறிந்ததே. இன்று ஒரு படத்திற்கு கதை எழுத ஒரு 2 மாதங்கள் வரை நீளலாம். இயக்குநர்கள் தங்களது கற்பனையை நல்ல கதையம்சமாக கொண்டு வரும் சிரமம் படம் பார்க்கும்பொழுதே தெரிய வரும்.

ஆனால், அண்ணாவால் மட்டும் இது எப்படி முடிந்தது. இது இன்று சாத்தியமாகுமா; என்பது வியக்கத்தக்கதாக உள்ளது. ஓர் இரவு படத்தின் கதையை ஒரே இரவில் எழுதி முடித்திருக்கிறார். இது அவரது தனித்திறனுக்கான சான்றை விளக்குகிறது. அண்ணா நல்ல கதாசிரியர், அரசியல் ஞானியாக இருந்தாலும் பாடல் எழுதும் ஆர்வமும் அவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அவர் எழுதியது ஒரே ஒரு பாடல் மட்டுமே. காதல் ஜோதி படத்தில் மறுமணத்தை ஆதரித்து புரட்சி நிறைந்த பாடலாக எழுதியிருப்பார்.

அண்ணா என்ன நினைத்தாரோ, தனது சிந்தனையை கருத்து ஆழமுடைய பாடலாக வடிவமைத்துள்ளார். ஒரு பாடல் என்றாலும் முத்தான வரிகள் என்றே கூறலாம். அந்த பாடலை ஒருமுறையாவது கேட்க தூண்டும் வரிகள். “உன் மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்தை உண்டு” நெஞ்சை தாலாட்டும் வரிகளால் காதல் மயக்கம் தருகிறது. ஒரு இளம் விதவையை விரும்புகின்ற இளைஞன், தன்னுடைய காதலை, அந்த விருப்பத்தை, ஆசையை அப்பெண்ணிடம் தெரிவிக்கும் பாடலாக இருக்கும்.

அண்ணா கொள்கையில் மட்டும் அல்ல சினிமாவிலும் புரட்சி செய்தவர். கைம்பெண் திருமணத்தை ஆதரித்து அழகாய் வரிகள் மூலம் மக்கள் மனதில் கொண்டு போய் சேர்த்துள்ளார். அதன் பிறகு உடல்நலக்குறைவால் பேரறிஞர் அண்ணா இறந்துவிட்டார். ஆனால், பலருக்கும் அண்ணாவை சினிமாவில் படம் இயக்கியவர், அரசியல்வாதி என்றொரு முகம் மட்டுமே மக்கள் அறிந்திருப்பார்கள். கொஞ்சம் நேரம் இருந்தால் காதல் ஜோதி படத்தில் இடம்பெற்ற அந்த பாடலை கேட்டு சுவைத்து பாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews