எம்.ஜி.ஆருக்கு பயந்த நம்பியார்… களத்துல இறக்கி வேடிக்கை பார்த்த பாக்கியராஜ்….

நம்பியார் தமிழ் சினிமாவின் பழம்பெரும் வில்லன்களில் ஒருவர். இவர் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் பக்தா ராமதாஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் பல திரைப்படங்களில் எம்ஜிஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இவரின் வில்லதனமான நடிப்பினால் எம்ஜிஆரின் ரசிகர்கள் இவரை பல முறை மிரட்டியுள்ளனராம். எம்.ஜிஆருடன் இணைந்து நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லனாக இவரின் நடிப்பினை மிஞ்ச ஆள் இல்லை எனதான் கூற வேண்டும்.

பாக்யராஜ் கண்டெடுத்த முத்து… நடிப்பில் முத்திரை பதித்த கல்லாப்பெட்டி சிங்காரம்…!!

ஒரு முறை எம்ஜிஆரின் ரசிகர்கள் இவரிடம் வந்து படங்களில் எம்ஜிஆரை அடிக்க கூடாது என மிரட்டியுள்ளனர். இவரும் நாம் தனியாக இருக்கிறோம் அவர்களோ குழுவாக வந்துள்ளனர். எங்கு நாம் வேறுவிதமாக பதிலளித்தால் நம்மை தாக்கிவிடுவார்களோ எனும் எண்ணத்தில் சரி இனி நான் அவரை அடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம். பின் அவர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனராம்.

இவரே ஒரு நேர்காணலில் இதனை பதிவிட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் அனைவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றவர் எம்ஜிஆர் என எம்ஜிஆருக்கு இவர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும்  இவர் அந்த கால நடிகர்களோடு மட்டுமல்லாமல் இந்த கால நடிகர்களுடன் ஈடுகட்டி நடித்தவர். வருஷமெல்லாம் வசந்தம், பாபா போன்ற திரைப்படங்களின் மூலம் பல இளம் நடிகர்களுடனும் நடித்திருந்தார்.

பழங்கால படங்களில் நடித்து வந்த இவரை இயக்குனர் பாக்கியராஜ் தனது இயக்கத்தில் வெளியான தூறல் நின்னு போச்சு எனும் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அப்படத்தில் இவர் குஸ்தி ஆசிரியராக நடித்திருந்தார். குணச்சித்திர வேடத்திலும் அதே சமயம் காமெடியாகவும் இவர் தனது நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார். இவர் இப்படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார்.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

மன்னாதி மன்னனையே பார்த்தவன் நான்… அவரை எதிர்த்தவன் நான்… அப்படிபட்ட என்னையே பஞ்சாயத்துல நிறுத்திவச்சுட்டானுங்க… எனும் வசனம் இருக்கும். அதனை பாக்கியராஜின் நண்பர்கள் இது எம்ஜிஆரை இகழ்வது போன்று உள்ளது என கூறியுள்ளனர். ஆனால் பாக்கியராஜோ அவரை இகழ்ந்து பேசுவதற்கு என்ன இருக்கிறது. இது நம்பியாரை பெருமைபடுத்தும் வசனம்தானே தவிர எம்ஜிஆருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என கூறி அதை படத்தில் சேர்த்துவிட்டாராம்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

தான் எந்தவொரு படம் இயக்கினாலும் ரிலீஸுக்கு முன் பாக்கியராஜ் அதனை எம்ஜிஆரிடம் போட்டு காண்பிப்பாராம். அதைபோலவே இதையும் காட்டியுள்ளார். ஆனால் நம்பியாரின் வசனத்தை கேட்டு எம்ஜிஆர் சிரித்துள்ளார். மேலும் தனது சிரிப்பை அடக்க முடியாமல் கைகுட்டையை வைத்து தனது வாயை மறைத்துள்ளாராம். எங்கு அந்த வசனத்தால் எம்ஜிஆர் கோபப்படுவாரோ என யோசித்த நம்பியார் இவரின் இந்த சிரிப்பை கண்டு சாதாரணாமாகிவிட்டாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews