விநாயகர் அருளைப் பெற வேண்டுதல் செய்யும் முறை!!

ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வழிபட வேண்டியது அவசியமாகும்.  விநாயகரை வழிபடும் முறைகளில் அவரூகே உரித்தான தோப்புக் கரணம் போடுதலும், இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளுதலும் ஆகும்.

உடலைச் சாய்த்து கைகளால் நெற்றியின் இருபொட்டுகளிலும் மூன்று முறை குட்டிக்கொள்ளவேண்டும். பின் மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.


நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். இதனால் புத்திக் கூர்மை மேம்படும் நினைவாற்றல் அதிகரிக்கும், ஞாபக மறதி இருப்பின் படிப்படியாக்க் குறையும்.

இதனாலேயே படிப்பு வரவில்லை எனில் மாணவர்கள் விநாயகரை வழிபட வேண்டும் என்றும், இரு கைகளிலும் குட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வழிபாடாக சொல்லப்படுகிறது.

 விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் அந்த 10 நாட்களில், படிக்கும் குழந்தைகள் வீட்டில் இருப்பின் புத்தகங்களை எடுத்து வைத்து, தூய மனதுடன் வேண்டுதல் செய்து, நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டும், தோப்புக் கரணம் போட்டும் வழிபாடு செய்து வந்தால் விநாயகர் அருளினை நிச்சயம் பெற முடியும்.

Published by
Staff

Recent Posts