உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் நாள் முடிவில் 300 ரன்களை தாண்டிய ஆஸ்திரேலியா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது என்பதும் முதலில் மூன்று விக்கெட்டுகள் இழந்தாலும் ஹெட் மற்றும் ஸ்மித் வலுவாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் அடித்துள்ளது. ஹெட் அபாரமாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் 146 ரன்களை 156 பந்துகளில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்மித் பொறுமையாக விளையாடினாலும் சதத்தை நெருங்கிவிட்டார் என்பதும் அவர் 95 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி நான்காவது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதன் பின்பு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோர்கள் தங்கள் பந்துவீச்சு திறமைகளை வெளிப்படுத்தினாலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பது ஒரு பெரும் குறையாக உள்ளது.

டெஸ்ட் போட்டியில் இரண்டு பேட்ஸ்மேன்களை சதம் அடிக்க விட்டுவிட்டால் ரன்கள் எகிறிவிடும் என்பது இந்திய அணிக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது. குறிப்பாக களத்தில் நன்கு விளையாடி வரும் ஹெட்ட் மற்றும் ஸ்மித் விக்கெட்டுகளை தூக்கினால் மட்டுமே இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 500 ரன்கள் தாண்டிவிட்டால் இந்தியா பொறுப்புடன் விளையாடி வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என்றும் இந்தியாவின் விக்கெட்டுகள் விழுந்தால் சாம்பியன் கோப்பை கையை வீட்டு நழுவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நான்கு வேக பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கிய நிலையில் அஸ்வின் என்ற ஒரு சுழற்பந்து வீச்சாளரையும் சேர்த்து இருக்கலாமோ என்ற எண்ணம் தற்போது ஏற்படும் வகையில் தான் போட்டி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...