உடல்நலம்

அட..! இப்படி ஒரு தினமா? உணவாகவும் மருந்தாகவும் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து பானம் ஆச்சே!

உலகெங்கும் உள்ள அனைத்து மக்களாலும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எடுத்துக் கொள்ளப்படக்கூடிய ஒரு உணவு பொருள் தான் பால்.

 

காலை தேநீர், காபி என தொடங்கி, மதிய உணவிற்கு தயிர் சாதம், இனிப்பிற்கு பால்கோவா என ஒரு நாளில் நம் வாழ்வில் பாலிற்கான பயன்பாடு என்பது அன்றாடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொதுவான ஒரு உணவுப் பொருளாகும்.

சைவப் பிரியர்களுக்கான பேலன்ஸ்டு உணவு என்றும் சொல்லலாம். கொழுப்பு, புரதம், விட்டமின், கால்சியம் என அனைத்து சத்துக்களும் பாலில் அடங்கியுள்ளது. 

ஒரு நாளைக்கு அனைவரும் சுமார் 250 மில்லி லிட்டர் பாலும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 500 மில்லி லிட்டர் முதல் 1000 மில்லி லிட்டர் வரையிலும் பாலை உணவாய் சேர்த்துக் கொள்வது நல்லது. 

மேலும் 40 வயதிற்கு மேற்பட்டோர் குறைந்த கொழுப்பு உடைய பாலையும்,  வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் அருந்தலாம்.

பாலில் இருந்து பெறப்படும் தயிர், மோர், வெண்ணெய், நெய், பன்னீர், சீஸ் என இவை அனைத்துமே சுவை மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடிய உணவுப் பொருட்களாகும் .

பாலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனிப்பு வகைகளை நாம் தயார் செய்ய முடியும். 

வெறும் பாலாய் குடிக்க பிடிக்காதவர்களுக்கென்றே ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், மாம்பழம் என ஃப்ளேவர்ட்டு பால் தற்பொழுது விற்பனையில் உள்ளது இவற்றில் அதிகம் ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. எனினும் சர்க்கரை சேர்க்கப்பட்டு உள்ளதால் நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு இந்த பால் ஏற்றதல்ல.

சிறப்புமிக்க இந்தப் பாலின் சிறப்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும்‌ வகையிலும் பாலின் நன்மைகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஐ நா சபை உணவு மற்றும் வேளாண்மை துறையால் 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூன் ஒன்றாம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பால் உலக உணவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு பாலில் ஒவ்வாமை உள்ளது. பாலில் உள்ள லாக்டோஸ் புரதத்தை ஏற்கும் தன்மை அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பாலை உணவாய் எடுத்துக் கொள்வதால் உடல் கோளாறுகள் ஏற்படலாம். பாலை அருந்தாவிட்டால் அவர்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே பாலில் ஒவ்வாமை உள்ளவர்கள் பாலிற்கு பதிலாக சோயா, முந்திரி, பாதாம், நிலக்கடலை இவற்றிலிருந்து பெறப்படும் பாலினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Published by
Sowmiya

Recent Posts