இந்தியாவை ஏமாற்றிய ஆப்கானிஸ்தான்: அரையிறுதி வாய்ப்பு பறிபோனது!

இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் அணி இன்று வெற்றி பெறவேண்டும் என்றும் அதன்பின் ரன்ரேட்டில் அடுத்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய போட்டியை மிகவும் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 125 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தற்போதைய நிலையில் அரையிறுதிக்கு பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...