‘மகளிர் ஐபிஎல்’-தொலைக்காட்சி உரிமத்தை வாங்கிய வயாகாம்!!

நம் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது இந்தியன் பிரீமியர் லீக். இதில் நன்றாக ஜொலிக்கும் வீரர்கள் இந்திய அணியில் கூட இடம்பெறும் வாய்ப்புகளும் காணப்படுகிறது.

இதனால் வீரர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களின் திறன் மேன்மேலும் வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் மகளிர் கிரிக்கெட்டினையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் ஐபிஎல் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூபாய் 951 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புவதற்கான தொலைக்காட்சி உரிமத்தை ரூபாய் 951 கோடிக்கு வாங்கியுள்ளது வயாகாம் நிறுவனம்.

2023 ஆம் ஆண்டிலிருந்து 2027 ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுகளுக்கான மகளிர் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வயாகாம் 18க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஐபிஎல் ஆட்டத்துக்கு ரூபாய் 7.09 உரிமை கட்டணம் என்ற விகிதத்தில் 5 ஆண்டு ஒளிபரப்பு உரிமத்தை வயாகாம் 18 வாங்கியுள்ளது.

ஐந்து அணிகள் பங்கேற்கும் முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான வீராங்கனை ஏல விற்பனை பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...