தோனி பேட்டிங் செஞ்ச 7 போட்டிகளில் உள்ள ஒற்றுமை.. கூடவே கோலி, ரோஹித் செய்யாத சாதனையை எட்டிப்பிடித்த தல..

ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகள் பெற்று பலமாக இருந்த அதே வேளையில் அதன் பின்னர் ஒரு சில தோல்விகளால் கொஞ்சம் நெருக்கடியையும் சந்தித்திருந்தனர். ஆனால் அவற்றை எல்லாம் சமாளித்து தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மிகச் சிறந்த கம்பேக்கையும் கொடுத்து மற்ற அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த சீசனிலேயே மற்ற அனைத்து அணிகளும் கண்டு பயப்படும் அணிகளில் ஒன்றாக இருந்து வந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தபட்சம் 200 ரன்களை அடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள ஹைதராபாத் அணி, பவர் பிளேவில் ஏறக்குறைய நூறு ரன்களை அடித்து வந்தது. இந்த சீசனில் மூன்று முறை 250 ரன்களை தாண்டி இருந்த ஹைதராபாத் அணி, தற்போது ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரின் முதல் இரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர்.

இப்படி பல சாதனைகளை இந்த சீசனில் ஆடிய ஒன்பதே போட்டிகளில் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தங்களின் 9 வது போட்டியில் 2 வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டிருந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 212 ரன்கள் எடுக்க பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியால் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிரடி ஆட்டம் ஆடும் ஹைதராபாத் அணியை சமாளித்து ஜடேஜா, தேஷ்பாண்டே, பதிரானா உள்ளிட்டோர் பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளித்ததால் எளிதாக சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. மேலும் முந்தைய போட்டிகளில் பந்துவீச்சில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இந்த முறை களமிறங்கியது அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி இதுவரை இந்த சீசனில் பேட்டிங் செய்துள்ள போட்டியில் உள்ள ஒற்றுமையை பற்றி தற்போது பார்க்கலாம். சென்னை அணி ஆடி முடித்த ஒன்பது போட்டிகளில் 7 போட்டிகளில் தோனி பேட்டிங் செய்திருந்தார். கிடைக்கும் வாய்ப்புகளில் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை பறக்க விட்டிருந்த தோனி 42 வயதில் இருக்கும் பார்மிற்கு பலரும் மெய்சிலிர்த்து போயிருந்தனர்.

ஹைதராபாத் போட்டியில் இரண்டு பந்துகளை எதிர் கொண்டிருந்த தோனி முதல் பந்தில் ஃபோர் அடித்திருந்தார். அப்படி இருக்கையில் தான் அவர் பேட்டிங் செய்த ஏழு போட்டிகளில் உள்ள ஒற்றுமையை பற்றியும் ஐபிஎல் தொடரில் இதுவரை யாரும் தொடாத இடத்தை தோனி தொட்டது பற்றியும் தற்போது பார்க்கலாம்.

7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த தோனியை 7 முறையும் யாராலும் அவுட் எடுக்க முடியவில்லை. அதேபோல தோனியின் ஜெர்சி நம்பரும் 7 தான் என இப்படி இதுவரை நடந்த போட்டிகளில் அனைத்துமே 7 என்று பொதுவாக இருக்கும் விஷயம் பற்றி ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல ஐபிஎல் வரலாற்றில் 150 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையும் தோனி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...