டாப் ஸ்டார் பிரசாந்த் துணை நடிகராக மாற காரணம் என்ன?.. அப்பா தியாகராஜன் சொன்ன சூப்பர் பதில்!..

மூத்த நடிகர் மற்றும் இயக்கநருமான தியாகராஜன் அவர்களின் மகன் பிரசாந்த் தற்போது தளபதி விஜயின் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இந்த படத்தில் நடிப்பதற்கான காரணத்தை பற்றி பேசியுள்ளார் தியாகராஜன்.

நடிகர் மற்றும் இயக்குநரான தியாகராஜன் மற்றும் சாந்தி தம்பதியருக்கு பிரசாந்த், பிரீத்தி என இரு பிள்ளைகள். நடிகர் தியாகராஜன் நல்ல நாள், நீங்கள் கேட்டவை, மலையூர் மம்பட்டியான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பூவுக்குள் பூகம்பம், சேலம் விஷ்ணு, ஆணழகன், ஷாக், பொன்னர் சங்கர், மம்பட்டியான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் தியாகராஜன் தன் மகன் நடிப்பில் வெளியான ஷாக் படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

கோட் படத்தில் பிரசாந்த்:

நடிகர் பிரசாந்த் வைகாசி பொற்ந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தியில் ஐலவ் யூ படம் மற்றும் தெலுங்கில் தொலி முடு, அனொகா பிரெம்யுட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகர் பிரசாந்த் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

அதை தொடர்ந்து 2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணத்தினால் இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். மேலும் பிரசாந்த் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, வின்னர், பார்தேன் ரசித்தேன், திருடா திருடா போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அப்படத்தின் தமிழ் உரிமையை தியாகராஜன் பெற்றார். அந்தகன் எனும் தலைப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் ரீலிஸ் தள்ளிக்கொண்டே போகும் நிலையில் வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தியாகராஜன் விளக்கம்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் பிரசாந்த் துணை நடிகராக நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு தியாகராஜன், தற்போது வரும் பல படங்களில் மல்டி ஸ்டார் நடிப்பது சகஜமாக ஆகிவிட்டது. மல்டி ஸ்டார் நடிப்பில் பான் இந்தியா படம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரசாந்த் நடிப்பதை நான் ஆதரிக்கிறேன் என்றார்.

மேலும் பிசாந்தும் விஜய்யும் க்ளோஸ் பிரண்ட்ஸ் வெங்கட் பிரபுவின் கதை பிடித்ததால் தான் நடிக்க போவதாக கூறினார். பிரசாந்த் அவரது படங்களை தானே முடிவு செய்துக்கொள்வார். நான் எதிலும் தலையிடுவதில்லை, நெகட்டிவ் ரோல் மட்டும் தவிர்க்க செய்வேன். கோட் படத்தில் பிரசாந்த்துக்கு முக்கியமான ரோல் என்பதால் தான் அவர் அதை ஒப்புக்கொண்டு நடிக்கிறார். மேலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு நன்றாக வந்துக்கொண்டிருக்கிறது என்று பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews