அதே லீக்கான டைட்டில் தான்!.. தளபதி 68 டைட்டிலை விடுங்க பவர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தீங்களா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதன் சுருக்கமான GOAT எனும் தலைப்பு சமூக வலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டது. கடைசி நேரத்தில் டைட்டிலை மாற்றுவார்கள் என்னை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய்க்கு மிகவும் இந்த டைட்டில் பிடித்து விட்ட நிலையில் The GOAT டைட்டில் உடனே தளபதி 68 படம் உருவாகி வருகிறது.

GCrTdBGbIAA3Jpa 1

தளபதி 68 டைட்டில் இதுதான்:

படத்தின் டைட்டிலை தாண்டி ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு வெளியாகும் போது வானத்தில் பறக்கும் விமானம் ஒன்றின் நிழல் தரையில் தென்படுவது போல உருவாக்கியிருந்தனர். அதன் பின்னர் தற்போது வெளியாகியுள்ள பஸ் லுக்கில் நடிகர் விஜய் வயதான தோற்றத்திலும் இன்னொரு விஜய் இளமையான தோற்றத்திலும் பாராசூட் மாட்டிக்கொண்டு விமானத்திலிருந்து கீழே குதித்து தரையிறங்கி நடந்து வருவது போன்ற காட்சியை ஃபர்ஸ்ட் லுக் காக நடிகர் விஜய் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை சொல்லியுள்ளார்.

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்:

நடிகர் அஜித்துக்கு மங்காத்தா படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, சிம்புவுக்கு மாநாடு எனும் மாஸ் படத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில் அடுத்த தளபதி விஜயை இயக்கி வரும் வெங்கட் பிரபு A Venkat Prabhu Hero எனக்கு குறிப்பிட்டுள்ள நிலையில் விஜய்க்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் அட்டகாசமான தலைப்புடன் ஹாலிவுட் தரத்தில் ஒரு பிரம்மாண்டமான படத்தை கொடுக்க போகிறார் என தெளிவாக தெரிகிறது.

டி.பி. கூப்பர் கதையா?:

இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹாலிவுட் படத்தின் தழுவலாக இந்த படம் இருக்குமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. மேலும், 1971 ஆம் ஆண்டு விமானத்திலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளை அடித்து குதித்த டி.பி. கூப்பரின் கதையா என்ற கேள்வியும் தற்போது சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது.

அவர் தொடர்பான ஆவணப்படம் ஏற்கனவே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைப்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் நடிகர் விஜய்க்கு இந்த படம் அடுத்த மைல்ஸ்டோன் ஆகவே இருக்கும் என்றும் தரமான மேக்கிங்கை வெங்கட் பிரபு கொடுத்து விட்டாலே போதும் படம் ஓடுவது வசூல் செய்வது எல்லாம் தளபதி விஜயே பார்த்துக் கொள்வார் எனக்கு ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.