வராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்

தமிழ்நாட்டில் வராஹிக்கு என்று பழமையான கோவில்கள் மூன்று இடத்தில்தான் இருக்கிறது. அரக்கோணம் அடுத்த பளூரில் வராஹிக்கு கோவில் உள்ளது. இது பழமையான கோவில், இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்கள வராஹி கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனையில் வராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

முடிக்க முடியாது என்று நினைக்கும் விசயத்திற்கு கூட நல்ல மனவலிமையை தந்து அந்த செயலை முடிக்க வைப்பவள் வராஹி. மிகப்பெரிய தஞ்சை அரண்மனையை கட்டிய ராஜராஜனுக்கு அத்தகைய மனவலிமையை கொடுத்தவள் வராஹி.

குழந்தை வரம், திருமண வரம், பில்லி சூனிய கோளாறுகள் என எந்த வித பிரச்சினைக்கும் நல்ல தீர்வை கொடுப்பவள் வராஹி. இவளை தொடர்ந்து வழிபட்டு வந்தாலும் வராஹி மாலை என்ற பாடலை தொடர்ந்து பாடி வந்தாலும் வாழ்வில் இவர்களுக்கு துன்பமில்லை.

சிவபெருமானின் போர்ப்படை தளபதிகளில் ஒருவர்தான் வராஹி. ஆடி மாத பஞ்சமி திதியில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவள். வராஹிக்கு பல வித அபிசேகங்கள் செய்தாலும் மாதுளம்பழம் மிக பிடித்தமானது. அதனால் மாதுளம்பழத்தில் வராஹிக்கு அபிசேகம் அலங்காரம் செய்து மகிழ்ந்தால் வராஹியும் மகிழ்ந்து நமக்கு வரங்கள் தருவாள்.

Published by
Staff

Recent Posts