ஜப்பான் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற தென்னிந்திய நடிகை யார்..?

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஹிந்தியில் இவர் நடித்திருந்த அனிமல் திரைப்படம் கடும் விமர்சனங்களை தாண்டி 1000 கோடி வசூலித்தது.

அதுமட்டுமல்ல, தெலுங்கில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான  திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் ராஷ்மிகாவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது..

rash3

புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம், புஷ்பா-2 தி ரூல் தயாராகி வருகிறது. இதைப்பற்றி நடிகை ராஷ்மிகா பிங்க்வில்லா என்ற சேனலலில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, புஷ்பா-2 படத்தில் நடித்தது ஒரு நீண்ட பயணம் போல் இருந்தது. மேலும் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைந்தது எனக்கு பார்ட்டி டைம் போல இருந்தது என்று கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று புஷ்பா-2 தி ரூல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷின் 51 வது படத்திலும் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். படபிடிப்புகளுக்கு இடையே போட்டோஷூட் எடுப்பதும், பல விழாக்களில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். தற்போது ஜப்பானுக்கு பறந்திருக்கிறார் ராஷ்மிகா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் க்ரன்ச் ரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

rash2

விமான நிலையத்தில் இறங்கியதும் ஜப்பானில் உள்ள ராஷ்மிகாவின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். புஷ்பா திரைப்படம் ஜப்பானில் வெளியான நிலையில், அதன் ரசிகர்கள் ரஷ்மிக்காவின் போஸ்டேர்ஹளை கையில் ஏந்தி ஆரவாரம் செய்தனர். இதை பற்றி நடிகை ரஷ்மிகா, இவர்கள் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது மற்றும் விலை மதிப்பில்லாதது. இவர்கள் அன்பை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் சார்பாக க்ரன்ச் ரோல் அனிமே அவார்ட்ஸ் விழாவில் கலந்து கொண்ட முதல் நடிகை என்ற பெருமையை பெற்றார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...