தந்தைக்கே முருகன் உபதேசம் செய்தது எதற்காகன்னு தெரியுமா? மாயாமலை என்றால் இதுதானா..?!

கந்த சஷ்டிக்கான விரதம் ஆரம்பித்து இன்று 3ம் நாள் ஆகிறது. இந்த நிலையில் இதுவரை முருகப்பெருமான் என்னென்ன முகங்களைக் காட்டினார். 4வது நாளாக என்ன தத்துவத்தில் காட்சி அளிக்கிறார் என்று பார்ப்போம்.

கந்த சஷ்டி கவசம் 4ம் நாளில் (16.11.2023) 4 முகத்தின் தத்துவம் என்னன்னு பார்க்கலாம். இது ஒரு நடுநாள். உடல் சோர்வுள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிங்க. ரொம்ப பேசாதீங்க. நமது எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நல்ல வைராக்கியத்துடன் முருகப்பெருமானை நினைத்து வழிபடுங்க.

முருகப்பெருமானுக்கு தினமும் ஒவ்வொரு தீபமாக ஏற்ற வேண்டும். 4ம் நாள் 4 தீபத்தை ஏற்ற வேண்டும். சற்கோண தீபத்தையும் அன்றாடம் ஏற்றிக் கொள்ளலாம். கோவிலுக்குப் போகும்போது கொடுக்கும் அபிஷேகப் பாலைக் குடித்துக்கொள்ளலாம்.

முருகனைப் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வாறு பாடுகிறார். ஏறி மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று. ஈசனோடு ஞானமொழி பேசும் முகம் ஒன்று. கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று. குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று.

swami malai 1
swami malai

இவற்றில் கடைசியாக பாடியது தான் 4வது முகம். 4வது நாளில் மலை என்றால் கிரௌஞ்சகிரி என்ற மலையைக் குறிப்பிடுகிறார். அது ஒரு மாயாமலை. அதை அடிப்பதற்காக வேலோடு நின்ற முருகப்பெருமான் என குறிப்பிடப்படுகிறது.

அருணகிரிநாதர் ஏன் மாயையைப் பற்றிப் பேசுகிறார்? சூரபத்மனை அல்லவா பேச வேண்டும் என்று ஒரு கேள்வி எழலாம். ஆணவம் என்பது நமக்கு எப்போது தோன்றியதோ அப்போதே மாயையோடு தான் நாம் இருந்தோம். மாயை இன்றி நாம் கிடையாது. நாம் இன்றி மாயை கிடையாது. அதனால ஆன்மா என்றைக்குத் தோன்றியதோ அன்றைக்கே இவை எல்லாம் நம்மோடு தோன்றிய குணங்கள். என்று நீ அன்றைக்கு நான்.

நீ என்றைக்கு இருக்கிறாயோ அன்றைக்கே நான் இருக்கிறேன். பதி, பாசு, பாசம் என சைவ சித்தாந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. 2 வகையான மாயை. சுத்த மாயை. அசுத்த மாயை. உலகப்பொருள்கள் மீது வைப்பது அசுத்த மாயை. இறைவன் மீது வைப்பது சுத்த மாயை. அதுவும் ஒரு மாயை தான்.

நாம் கோவிலுக்குப் போய், விரதம் இருந்து முருகப்பெருமானைப் பார்த்ததும் மயக்கநிலையில் இருக்கிறோம். உலகப்பொருள்கள் மேல் உள்ள நாட்டம் கொண்ட மாயை அழிக்க வேல் தேவை. அதனால் தான் முருகன் இந்த வேலுடன் காட்சி அளிக்கிறார். அதுவும் மாயையான கிரௌஞ்ச மலையை அழிக்க வருகிறார்.

4வது படைவீடான சுவாமி மலையில் முருகப்பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்த கோலத்தில் அதாவது தகப்பன்சுவாமியாக காட்சி அளிக்கிறார். நம் மனதில் உள்ள மாயையை நீக்குவதற்காகவே உபதேசம் செய்கிறார்.

இருள் என்பது மாயை என்றால் ஞானம் என்பதை விளக்காக வைத்துக் கொள்ளுங்கள். விளக்கை ஏற்றினால் இருள் தானாகப் போய் விடும். அதனால் தான் எம்பெருமான் இந்தத் திருத்தலத்தில் உபதேச மூர்த்தியாகக் காட்சி தருகிறார். அதாவது குருவாக இங்குக் காட்சியளிக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews