விஜய் ஆண்டனிக்கு என்னாச்சு? ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்களின் எண்ணிக்கை காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் தங்களை நடிகர்களாக காட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளனர்.

அவர்களின் ஒருவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக சினிமாவிற்குள் வந்து ‘நான்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் என்ற திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சோசியல் மெசேஜாகவும் அமைந்தது. இதனால் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று கேட்கும் அளவிற்கு வெற்றியினை கண்டது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த சூழலில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு பாடம் படிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அண்மை தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் லங்காவின் தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது லங்காவியிலிருந்து கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக விஜய் ஆண்டனி கொண்டு செல்லப்பட்டுள்ளார். பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வரும் நிலையில் விபத்தில் சிக்கினார் விஜய் ஆண்டனி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...