WTC இறுதிப்போட்டி.. 400க்கும் அதிகமான டார்கெட்.. இதற்கு முன் இந்தியாவின் சாதனை என்ன?

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது என்பதும் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி சற்றுமுன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து அந்த அணி 403 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ausஇந்த நிலையில் 400க்கும் மேல் டார்கெட் இருந்தால் இந்திய அணி அதை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கடந்த 1976 ஆம் ஆண்டு மேற்கிந்த தீவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 403 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 387 என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் தற்போதும் 400க்கும் அதிகமான இலக்கு இருந்தாலும் இந்திய அணி அதை எட்டி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...