பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன் – கழுகு

6d28f0612f816613bcdcc6092aaa97ce

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகால் தாக்கப்படுவது போல கனவில் கண்டால் நீங்கள் தற்போது செய்து வரக்கூடிய தொழில் மற்றும் வேலைகளில் வெற்றியை அடைய பெரும் சிரமங்களை சமாளிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.

ஒரு கழுகை பார்த்து நீங்கள் பயப்படுவது போல  கனவில் கண்டால் எதிர் வரும் காலங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்பதை குறிப்பிடுகிறது

ஒரு கழுகு மேல் நோக்கி பறந்து செல்வதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கை பாதையில் லட்சியத்தை அடைய முன்னேறி செல்வீர்கள் என்பதை குறிப்பிடுகிறது

ஒரு கழுகு உங்களுடைய தலையில் வந்து  அமர்ந்து இருப்பது போல நீங்கள் கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிப்பிடுகிறது

ஒரு கூட்டில் கழுகுகள் அதிகம் இருப்பது போல நீங்கள் கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைக்கப் போகிறது என்பதை குறிப்பிடுகிறது

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகை எட்டி பிடிப்பது போல கண்டால் உங்களுடைய தொழிலில் விரைவில் ஒரு சில தோல்விகள் ஏற்படப் போகிறது என்பதை குறிப்பிடுகிறது

ஒரு கழுகை நீங்கள் கொல்வது போல கனவு கண்டால் உங்களுடைய தொழில் மற்றும் வேலைகளில் இருக்கக்கூடிய இலக்குகளை அடைவதற்கு யாராலும் உங்களை தடுக்க முடியாது என்பதை குறிக்கிறது. நீங்கள் உங்களுடைய எல்லா எதிரிகளையும் தோற்கடித்து மிகப்பெரிய செல்வத்தை அடைவீர்கள்.

வேறொருவர் கழுகை கொல்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் ஒரு சில பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டங்கள் ஏற்படப் போகிறது என்பதை குறிப்பிடுகிறது

கழுகு சாப்பிடுவதுபோல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு வரக்கூடிய எந்தவிதமான சவாலான போராட்டங்களிலும் போராடி மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள் என்பதை குறிப்பிடுகிறது

கழுகு வானத்தில் வட்டமடிப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்கக் கூடிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை குறிப்பிடுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.