என்னது… KPY பாலாவிற்கு திருமணமா…? குவியும் வாழ்த்துக்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கலக்க போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானவர் பாலா. இவரின் தனி ஸ்டைலான டைமிங் காமெடியால் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடுவார்.

பல மேடைப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாலா, படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மக்களுக்காக தொண்டு செய்வதன் வாயிலாக மேலும் புகழ் பெற்றுக் கொண்டிருக்கிறார். தன் உழைப்பில் வந்த வருமானத்தை வைத்துக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். பல தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு நேரில் சென்று தலா 1000 ரூபாய் வீதம் இரண்டு லட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்கியுள்ளார். இதுமட்டும்மல்லாமல் செங்கல்பட்டு அருகே உள்ள கிராமத்திற்கு சுத்திகரிப்பு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பாலா மாணவர்களிடம் உரையாடினார். அப்போது புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலினால் உயிரிழந்ததை பற்றி கூறுகையில், குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்பதை சொல்லிக் கொடுப்பதை விட ‘டோன்ட் டச்’ என்று சொல்லி கொடுங்கள். இப்போது உள்ள சூழ்நிலையில் அதுதான் குழந்தைகளைப் பாதுகாக்க சிறந்த வழி என்றார். மேலும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்பு, அங்கிருந்த மாணவர்கள் பாலாவின் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த மாதம் தன் காதலியை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். அதற்கு தங்கள் காதலி யார் என்று மாணவர்கள் கேட்டதற்கு தன் சிரிப்பை பதிலாக்கி கொண்டார்.  அங்கிருந்த மாணவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதை அறிந்த பலர் சமூக வலைத்தளங்களில் பாலாவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...