ஆன்மீகம்

மீனாட்சி அம்மனுக்கும், முத்தாரம்மனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கதை இருக்கா…? வாங்க பார்க்கலாம்…

குலசை முத்தாரம்மனுக்கு எத்தனை கதைகள் சொன்னாலும் அத்தனையும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. இந்த அழகான கதையையும் படித்துப் பரவசம் அடைவோம். வாங்க பார்க்கலாம்.

பாண்டியர் குலத்துல இளவரசியா இருக்குற மீனாட்சி அம்மன் இந்த உலகத்துல இருக்குற எல்லா அரசர்களையும் ஜெயிச்சிடுறாங்க. அடுத்து ஜெயிக்கிறதுக்கு யாருமே இல்லையேன்னு சொல்லி கைலாசத்துக்குப் போயி சிவபெருமான் கூடவே சண்டைக்குப் போறாங்க.

Soorasamharam

அங்கே போயி சிவபெருமானைப் பார்த்த உடனேயே காதல் பண்ணிடறாங்க. அவரையே மதுரைக்கும் அழைச்சிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிடறாங்க.

அப்புறமா தம்பதி சமேதராக தென்னாடு, பாண்டிய தேசம்னு எல்லா இடங்களுக்கும் போயி மக்களை சந்திக்கிறாங்க. அவங்க கஷ்டங்களை எல்லாம் கேட்டுத் தீர்த்து வரலாம்னு தான் இங்க வந்துருக்காங்க.

Meenakshi 2

இப்படி வந்தவங்க குலசேகரப்பட்டணம் அருகில் வரும்போது ஒரு ஆழிப்பேரலையில் ஒரு கணவனும், மனைவியும் தத்தளிச்சிக்கிட்டு இருந்தாங்க.

அவங்களைப் பார்த்ததும் மீனாட்சி அம்மன் காப்பாற்றிடறாங்க. அப்புறம் காப்பாற்றப்பட்ட பெண் சொல்றாங்க. எங்களைக் காப்பாற்றின மாதிரி நீங்க இங்கேயே தங்கியிருந்து இந்த ஊரு மக்களை எல்லாம் காப்பாத்துங்க. உடனே மீனாட்சி அம்மன் முத்தாரம்மனா வடிவெடுத்து ஞானமூர்த்தீஸ்வரரோட இங்கேயே தங்கிட்டாங்க.

Karunkaali

தசரா நெருங்கி வருகிறது. வேடம் போட்டு பக்தர்கள் ஊர் ஊராகச் சென்று காணிக்கைக்காக வரும்போதும், அவர்கள் மேள தாளத்துடன் ஓங்காரமாக ஆடுவதைப் பார்த்தாலே நமக்குள் பக்தி பரவசம் ஊற்றெடுக்கும். இத்தகைய அனுபவங்களை அந்தப் பக்தர்கள் மனமுவந்து ஆண்டு தோறும் மாலை போட்டு விரதம் இருந்து நமக்குள் ஒரு அற்புதமான அனுபவத்தை உண்டாக்கி விடுகிறது.

குலசை முத்தாரம்மனை வேண்டி 41 நாள்கள் பக்தர்கள் விரதம் இருப்பர். அப்படி நேர்த்திக்கடன் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வேண்டிய நலன்கள் யாவும் கிட்டுகிறது. வருடம் முழுவதும் உற்சாகமாக வேலை செய்ய இந்த விரதம் பக்தனை வழிநடத்துகிறது. தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் தங்களால் முடிந்த வேடத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

குறவன், குறத்தி, ராஜா, ராணி, போலீஸ், கரடி, சிவன், இந்திரன், கிருஷ்ணன், முருகன், குரங்கு, எலும்புக்கூடு, கிறுக்கன், காளி, கருங்காளி என பல்வேறு வேடங்களை ஏற்று பக்தர்கள் வலம் வருவது நமக்குள் உற்சாகத்தைக் கரைபுரண்டு ஓடச் செய்கிறது. இந்த ஆண்டும் வரும் 15ம் தேதி குலசை முத்தாரம்மன் கோவிலில் தசராவிற்கு கொடியேறுகிறது. அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி அன்று குலசையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.

தசாரா திருவிழாவினையொட்டி குலசேகரப்பட்டினமே பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும். நாமும் அம்மனை சென்று வணங்கி அம்மனின் அருளைப் பெறுவோம்.

Published by
Sankar

Recent Posts