உண்மையில் ஆன்மிக வாழ்க்கை என்பது என்ன?

நம் வாழ்க்கையோடு கலந்தது தான் ஆன்மிகம். ஆன்மிகம் என்றால் எப்பொழுதும் கடவுளை தரிசனம் செய்து கொண்டே இருப்பது. நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை எந்நேரமும் பூசிக் கொண்டு இருப்பது மட்டும் கிடையாது.

நம் மனதில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களையே நினைத்து மற்றவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், தீங்கு செய்யாமல் வாழ்வதும் ஆன்மிகம் தான். அதாவது நம் மனசாட்சி தான் நம்முடைய கடவுள். அத்தகைய கடவுளுக்கு பயந்து உண்மையுடன் வாழ்வதும் ஆன்மிக வாழ்க்கை தான். 

மேலும் கடவுளுக்கு எந்நேரமும் பூஜை செய்து கொண்டே இருப்பது தான் ஆன்மிகத்தை நோக்கி செல்பவர்களின் கடமை என்று சொல்வார்கள். அது உண்மை கிடையாது. கடவுளை உண்மையாக ஒரு நொடி நினைத்தாலே போதும். நாம் ஆன்மிகத்தை அடைந்து விடலாம்.

உண்மையில் ஆன்மிக வாழ்க்கை என்பது எதுவென்றால் அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்பாடாமல், அடுத்தவருக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாமல் நாம் நமது கடமைகளை சரியாக செய்து, 

மேலும் அனைவருக்கும் மரியாதை கொடுத்து, பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் எண்ணி வருந்தி, பாவச்செயல்களுக்கு ஆளாகாமல் நம் மனதிற்கு நேர்மையான முறையில் வாழ்வது தான் ஆன்மிக வாழ்க்கை.

 

Published by
Staff

Recent Posts