Categories: ஜோதிடம்

அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் நாம் என்னென்னவற்றை செய்யலாம்…

உலகில் பல கலைகள் உள்ளன. இந்த கலைகளில் ஜோதிடக் கலை என்பது மிகப்பெரிய கலையாகும். நாம் எந்த ஒரு நல்ல விஷயம் செய்ய வேண்டுமென்றாலும் ஜோதிடம் பார்த்து அதில் சொல்லக்கூடிய நாளில் தான் அனைத்தையும் செய்வோம். இப்படி ஜோதிடத்தில் நல்ல நாள் என்று கூறப்படும் திதி நாளில் இன்று நாம் பார்க்க இருப்பது அஷ்டமி திதி, நவமி திதி.

அஷ்டமி திதிக்கு உகந்த தெய்வம் ருத்திரன் ஆவார். இந்த திதி நாளில் நமக்கான அனைத்து பாதுகாப்பு விஷயங்களையும் செய்யலாம். அதாவது வீடு, வயல் மற்றும் நம் உடல் நலத்திற்கு தேவையான அனைத்தையும் செய்யலாம். மேலும் புதிதாக எதாவது வாங்கமென்றாலும் இந்த நாளில் வாங்கலாம். நாட்டிய கலை பயில்வதற்கும் இந்நாள் ஏற்ற நாள்.

நவமி திதிக்கு அதிதேவதை என்று சொல்லக்கூடிய தெய்வம் எதுவென்றால் அம்பிகை ஆகும். 

நமக்கு எதிரிகள் மீது உண்டான பயத்தை போக்குவதற்கு காரணமான தெய்வம் அம்பிகை தான். இந்த நாளில் அம்பிகைக்கு பூஜை செய்து வணங்கினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும், தைரியமும் ஏற்படும் என்பது அனைவரின் நம்பிக்கை. மேலும் நமக்கு மற்றவர்களால் ஏற்படும் தீமையை ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபடவும் இந்த நவமி திதி நாள் உகந்த நாள்.

Published by
Staff

Recent Posts