வருகிறது…. ஆடிப்பூரம்…! தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்க இதைச் செய்யுங்க…!

ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த தினம். இது ஒரு சிறப்பான நாள். ஆண்டாள் அவதரித்த நன்னாள். அதனால் இந்த நாள் சைவமும், வைணவமும் கொண்டாடப்படும் நாளாக உள்ளது.

மேலும் இந்த நன்னாளில் தான் முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் தங்களது தவத்தைத் தொடங்குவார்களாம். மணமாகாத பெண்கள் இந்த தினத்தில் ஆண்டாளை மனமுருக வேண்டி கும்பிட்டால் திருமணம் நடந்து விடும் என்பது ஐதீகம்.

Aadipooram2
Aadipooram

இன்றைய தினம் சுமங்கலிகள் வளையல் கொடுக்கலாம். அம்மனுக்கு வளையல் அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அதைக் காண கண் கோடி வேண்டும். இது அம்மனுக்கு வளைகாப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இது பிள்ளைப்பேறுக்குரிய வளைகாப்பு கிடையாது.

இந்த வளையல்களை வாங்கி மணமாகாத பெண்கள் அணிந்தால் விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடந்து விடும். அதே போல் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் வாங்கி அணிந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் கோவில்களில் கண்ணாடி வளையல்கள் வாங்கி அணிவித்து தங்களைச் சுற்றியுள்ள பெண்கள், சிறுமியர்களுக்கும் வளையலைத் தானமாகக் கொடுப்பது புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், நெல்லையப்பர் கோவில், அழகர் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில்களில் அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு விழா பிரசித்திப் பெற்றது.

Aadi pooram
Aadi pooram

கோவில்களுக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து இந்த தினத்தில் வீட்டிலேயே இருந்தும் வளைகாப்பு கொண்டாடலாம். பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். பகைவர்களும் நண்பர்களாவர். தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து ஓங்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தினம் வரும் திங்கட்கிழமை (ஆக.1)ல் வருகிறது. ஆடி 16ல் இந்த தினம் வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment