ஒரு கப் தேங்காய்ப்பாலில் இவ்ளோ நோய்களும் குணமாகிறதா?!! அடடா…இது என்ன இது என்ன இது என்ன அதிசயமே…!!!

சிலர் தேங்காயில் கொழுப்புச்சத்து உள்ளது. அதிகமாக சேர்க்கக்கூடாது. உடல் எடை போட்டு விடும் என்று தவறாக சொல்வதுண்டு. உண்மையில் அது கிடையாது. தேங்காயில் நல்ல கொழுப்பு தான் உள்ளது. இன்னும் எக்கச்சக்கமான பலன்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன.

தினமும் ஒரு கப் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நம் உடலில் நிகழும் என்று தெரியுமா?

தேங்காய்ப்பாலில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, தயாமின், நியாசின், பேன்டதினிக் அமிலம், ரிபோபிளேவின், பைடாக்சின் மற்றும் தாது உப்புகளான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் கொட்டிக்கிடக்கின்றன.

அதுமட்டுமா கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்புகள், இயற்கை சர்க்கரை என அனைத்து வகையான சத்துக்களும் நிரம்பியுள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இது ஓட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் அமிர்தம்.

ரத்தசோகையைக் குணப்படுத்துகிறது. எப்படி என்றால் இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கைக் குறையும். இதனால் ரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் ரத்த சோகையை உண்டாக்கும். இதற்கு தினமும் ஒரு கப் தேங்காய்ப்பாலைக் குடித்தால் போதும். உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் அளவு கிடைத்து விடுகிறது.

coconut milk
coconut milk

coconut milk 1

உடல் எடையைக் குறைக்க வேண்டும். ஆனால் அனைத்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு தேங்காய்ப்பால் தான். பொதுவாக குறைந்த அளவு செலீனியம் உள்ளவர்களுக்கு முடக்குவாதம் ஏற்படுகிறது.

இந்தச்சத்து தேங்காய்ப்பாலில் அதிகளவில் உள்ளது. கீல்வாதம் உள்ளவர்கள் இதைச்சாப்பிட்டால் இதுதான் அவர்களுக்கு அருமருந்தாக அமையும். இதில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம் ரத்தக்கொதிப்பின் அளவைக் குறைக்கும்.

தேங்காய்ப்பாலில் உள்ள நிறைவுற்றக் கொழுப்பு அமிலங்களில் 50 சதவீதம் லாரிக் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலுக்குத் தரும். முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக்கூடிய மோனோலாரிக் என்ற பொருள் தேங்காய்ப்பாலில் தான் அதிகளவில் உள்ளது. இது ரத்தக்கொழுப்பையும் குறைக்கிறது.

வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காததாலும், சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள், நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தைத் தருகிறது. அவர்கள் வாரத்தில் 3 நாள்களாவது தேங்காய்ப்பால் சாப்பிட்டு வந்தால் தசைகள், நரம்புகளில் உள்ள இறுக்கம் தளர்ந்து உடலுக்கு நல்ல பலத்தைத் தரும்.

எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இன்றியமையாதவை. தேங்காய்ப்பாலில் இந்த இரு சத்துக்களும் அதிகளவில் உள்ளதால், தேங்காய்ப்பால் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். இது எலும்புருக்கி நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இதில் உள்ள செலீனியம் ஆர்த்தரடைஸ் நோயையும் குணப்படுத்துகிறது. தேங்காய்ப்பாலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி தோலில் பளபளப்புத் தன்மை உண்டாகும். தோலின் நிறத்தையும் அதிகரித்து இளமைத்தோற்றத்தையும் தருகிறது.

cocnut milk
coconut milk

கேரள மக்களைப் பார்;த்தால் தெரியும். அவர்கள் சருமம் ஜொலிப்பதற்கான காரணம் தினமும் தேங்காய்ப்பால் அல்லது அதனுடன் தொடர்புடைய உணவுப்பொருள்களை சாப்பிடுவதுதான். பொதுவாகவெ கேரளாவில் தேங்காய்கள் ரொம்பவே பிரபலம். பெரிய பெரிய தேங்காய்களை இங்கு கண்டு களிக்கலாம்.

தேங்காயில் உள்ள மக்னீசியம் தசைபிடிப்பு, மனப்பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது. ஒரு கப் தேங்காய்ப்பாலில் 89 மில்லிகிராம் மக்னீசியம் உள்ளது. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இது. வயிற்றுப்புண் ஆற தேங்காய்ப்பால் போன்று மருந்து எதுவுமே கிடையாது.

வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். அவர்களுக்கு விரைவில் அவை ஆறிவிடும். எல்லாவித வயிற்றுக்கோளாறுகளையும் சரிசெய்து விடும்.

உடல் சூட்டைக்குறைக்கும். பசுவின் பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட தேங்காய்ப்பாலை சாப்பிடலாம். தேங்காய்ப்பாலை வெறும் வயிற்றில் மட்டும் அல்ல. எந்த நேரத்திலும் குடிக்கலாம். அது உடலுக்கு ஒரு அருமருந்தாகவே அமையும்.

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.