அதிரடி விலை வீழ்ச்சி; அள்ளிச் செல்லும் இல்லத்தரசிகள்! குஷியில் வர்த்தகர்கள்;

உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. ஆனால் எந்த விலையும் நிர்ணயம் முடியாத அளவிற்கு தினம்தோறும் ஏற்றம் இறக்கமாக காணப்படுவது தங்கமாகும்.

தங்கத்தின் விலை நாள் தோறும் மாறிக் கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. இதனால் இல்லத்தரசிகள் வர்த்தகர்கள் சோகத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விலை வீழ்ச்சி ஒன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து உள்ளதாக தெரிகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன்  38,368 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் அங்கு 4790ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு பத்து காசு குறைந்துள்ளது இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 67.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.