ஜோதிடம்

திருமண தோஷம் போக்கும் மீமிசல் கல்யாண ராமர்

ராமநாதபுரம் டூ நாகப்பட்டினம் ஈஸிஆர் சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மீமிசல் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில்தான் கல்யாணராமர் கோவில் உள்ளது.

இந்த ஊரின் மெயின் ஈஸிஆர் சாலையிலே பஸ்ஸை விட்டு இறங்கிய உடனே மீமிசல் கல்யாணராமர் கோவில் உள்ளது.

கோவிலில் கல்யாண புஷ்கரணி என்ற தீர்த்தம் உள்ளது. அருகில் உள்ள கடலில் குளித்து விட்டு இங்குள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளிப்பது சிறப்பை தரும்.

இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தார்.

குழந்தை இல்லாதவர்கள் கேதுவுக்கு உரிய தானியமான கருப்பு உளுந்தை இங்கு பிரசாதமாக பெற்று செல்கின்றனர். இந்த பிரசாதத்துக்கு முகுந்தமாலா என்று பெயர். இந்த பிரசாதத்தை பெற்று  90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தையும் பூஜித்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர் இவரை வீட்டில் வைத்திருப்பதாலும் குழந்தை பாக்கியம் சீக்கிரம் ஏற்படும் என்ற ஐதீகம் உள்ளது.

Published by
Abiram A

Recent Posts