கிழவனாக சினிமாவில் அறிமுகமாகி, 15 திரைப்படங்களையும் தயாரித்த வி.கே ராமசாமி குறித்து அறியாத பல தகவல்கள்!

1926 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாள் விருதுநகரில் பிறந்த வி.கே ராமசாமி பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் 7வது வயதில் நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்தார். வி கே ராமசாமி என்பதை சுருக்கமாக வி.கே.ஆர் என்று அழைத்தனர்.

மதுரையில் புகழ்பெற்ற பாய்ஸ் நாடக கம்பெனியில் சிரிப்பு நடிகராக நடித்து வந்த இவர், தியாக உள்ளம் என்ற நாடகத்தில் 60 வயது முதியவராக பேங்கர் சண்முகம் பிள்ளை என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். 60 வயது முதியவராக நடித்த வி கே ராமசாமி 15 வயதே ஆன சிறுவன் என்பதே ஆச்சரியமான ஒரு உண்மைதான்.

தியாக உள்ளம் என்ற நாடகத்தை பார்த்து வியந்து போன ஏவிஎம் செட்டியார், அந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தால் படம் நன்றாக ஓடுமென்று நினைத்து அந்த நாடகத்தை அப்படியே நாம் இருவர் என்ற படமாக எடுத்தார். நாடகத்தில் நடித்த அதே முதியவர்களிடத்தில் அந்த படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதோடு அதுவே இவருக்கு முதல் படமாகவும் அமைந்தது.

அதன் பிறகு ஏராளமான படங்களில் முதியவராக நடிக்க ஆரம்பித்தார். விருதுநகரை சேர்ந்த பி கே ராமசாமியின் பக்கத்து தெருவில் கர்மவீரர் காமராஜர் வசித்து வந்தார் என்பதும், காமராஜர் வீட்டில் காமராஜரும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் மாலை வேளையில் ஒன்று கூடி பேசும் போது அந்த கூட்டத்தில் சிறுவனாக ராமசாமியும் இருப்பார் என்பதும் சிறுவயதில் இருந்தே காமராஜரிடம் நல்ல பழக்கம் வைத்திருந்தவர் இந்த ராமசாமி என்பதும் சுவாரஸ்யமான ஒரு உண்மை.

பி கே ராமசாமி ஒரு பேட்டியில், இரண்டு பேரு தான் தமிழ்நாட்டில் பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட், ஒருத்தன் கணேசன் இன்னொருத்தன் பாபு. இதை நான் சொன்னேன்னு எழுதிறாத மத்தவங்க சண்டைக்கு வந்துருவானுங்க, எல்லா பயல்களும் நமக்கு வேண்டப்பட்ட பயலுக தான் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதில் சிவாஜி கணேசனையும், சந்திரபாபுவை தான் சுருக்கமாக கணேசன், பாபு என்று குறிப்பிட்டுள்ளார்.

மூதேவி என்ற வெறுப்பான சொல் கூட இனிப்பாக மாறியது வி.கே ராமசாமி பேசிய வசனங்களுக்கு பிறகு தான் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. ராமசாமியின் உடல் அமைப்பும் அவர் தமிழ் வசனங்களை உச்சரிக்கும் விதமும் பார்ப்பவர்கள் மனதில் ஒருவித இனம் புரியாத பூரிப்பை ஏற்படுத்தியது. ஏராளமான படங்களில் நடித்து செல்வமும் அதிகமாக குதிரை பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஒருமுறை குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்ற இவருக்கு ஜெமினி அதிபர் எஸ் எஸ் வாசன் பரிசளித்து விட்டு ராமசாமியை தனி அறைக்கு கூப்பிட்டார். நீதானே ராமசாமி நாளைக்கு என்ன ஸ்டூடியோவில் வந்து பாரு என்று சொன்னார். மறுநாள் ஸ்டூடியோவிற்கு சென்று வாசனை பார்த்த இவர் இந்த குதிரையை வைத்து இனி ரேஸ் பக்கம் போகாத அது எங்கோ உன்னை இழுத்து விட்டும் இத்தோட நிறுத்திக்க என்று அறிவுரை கூறினார். வாசன் அறிவுரையை கேட்டு அன்று முதல் ரேஸுக்கு செல்வதையே ராமசாமி நிறுத்திவிட்டார்.

ரமணி அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்ட விகே ராமசாமிக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். வி கே ராமசாமி மிகவும் வெளிப்படையான மனிதர் என்பதற்கு அனைவருக்கும் தெரிந்தது. அதிலும் குறிப்பாக நான் குடிப்பழக்கத்தையும் இன்னும் சில கெட்ட பழக்கங்களையும் விடுவதற்கு என் மனைவி ரமணி தான் காரணம் என்று தன் மனைவியை எல்லோர் முன்னிலையிலும் புகழ்ந்தார்.

நான் லட்ச லட்சமாக சம்பாதித்த பணத்தை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இழந்துவிட்டேன் என் பணத்தை எவன் எவனோ எப்படி எல்லாமோ தின்னுட்டாங்க என் மனைவி ரமணி மாதிரி ஒருவர் அப்போது இருந்து என்னை வழிநடத்தி இருந்தால் நான் இப்படி கடன் காரனாகி இருக்க மாட்டேன் என்று வெளிப்படையாகச் சொன்னார் விகே ராமசாமி.

15 வயது சிறுவனாக இருந்தபோதே முதியவராக நடிக்க ஆரம்பித்த இவர் தன் வாழ்நாளின் கடைசிவரை முதியவராகவே நடித்து முடித்தார் என்பது வலி மிகுந்த ஒரு உண்மை. 6 புஷ்பங்கள் என்ற படத்தில் ரஜினியுடன் நடித்த போது ரஜினிகாந்த் 100 ரூபாய் நோட்டு கட்டை எடுத்து இவரின் தலையில் அடிப்பது போல் காட்சி எடுக்கப்பட இருந்தது, அப்போது ராமசாமி நோட்டுக்கட்டில் உள்ள பேனாவை எடுத்துவிட்டு அடியுங்கள் காட்சியும் நன்றாக இருக்கும் எனக்கும் வலிக்காது என்று ரஜினியிடம் கேட்டுக் கொண்டார்.

ராமசாமி சொன்னதை மறந்து விட்ட ரஜினி பேனாவை எடுக்காமல் அப்படியே கட்டாக அடிக்க ராமசாமியின் முகத்தில் காயமும் ஏற்பட்டது. உடனே நான்தான் அப்பவே சொன்னேனே என்ற சத்தமாக சொன்ன ராமசாமி அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு ரஜினியே வந்து இவரிடம் பலமுறை மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

தன் கடைசி காலத்தில் வறுமையில் இருந்த விகே ராமசாமி ரஜினியிடம் ஒரு படம் பண்ணி தருமாறு கேட்டுக் கொண்டார். பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு நீண்ட காலம் தொடர்பே இல்லாமல் இருந்த ரஜினி இடமிருந்து திடீரென ஒரு போன் வந்தது. ஐயா நீங்கள் படம் பண்ணி தர கேட்டீங்க என் உடல்நிலை, மனநிலை காரணமாக நான் இமயமலைக்கு போயிட்டேன். இப்ப உங்களை போல இன்னும் சில பேருக்கு சேர்த்து ஒரு படம் பண்ணி தரலாமா என பலர் கேட்கிறார்கள் உங்க அபிப்பிராயம் என்ன என்று கேட்டார்.

அதற்கு ராமசாமி நீங்க செய்வது உதவின்னு சொல்வதை விட தர்மம் ஒன்றுதான் சொல்வேன் என்று சொன்னதும், அருணாச்சலம் என்ற படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் தயாரிப்பாளர் என்ற பதவியை ராமசாமிக்கு கொடுத்து லாபத்தில் ஒரு பங்கையும் பிரித்துக் கொடுத்தார் ரஜினி.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போதே அப்படி ஒரு பாடல் எழுதிய வாலி! சுவாரசியமான தகவல்கள்!

தன் எஞ்சிய காலத்தை நிம்மதியாய் கழிக்க அந்த பணம் பேரு உதவியாக இருந்ததாக புத்தகம் ஒன்றில் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். கலை உலக பயணம் என்ற நூல் ஒன்றையும் எழுதி உள்ளவர், 15 திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 15 ஆண்டுகள் நாடகத்திலும், 35 ஆண்டுகள் சினிமாவிலும் ஆக சுமார் 50 ஆண்டு காலம் நடிப்பு துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி 1970 ஆம் ஆண்டு தமிழக அரசு கலை மாமணி விருது கொடுத்து கௌரவித்தது.

பலவிதமான உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் காலமானார்.

Published by
Velmurugan

Recent Posts