ட்விட்டரில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ள விவேக்… காரணம் இதுதானாம்!!

மற்ற நகைச்சுவை நடிகர்களைக் காட்டிலும் நடிகர் விவேக் அவர்களிடம் ஒரு தனித்தன்மை இருக்கும். நகைச்சுவையில் சமூகத்திற்கு கருத்துகளைச் சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் விவேக்.

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி என நகைச்சுவை நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் நெடுங்காலம் தொட்டு இருந்து வருகின்றனர்.

இவர்களில் எம்.ஆர். ராதாவைப் போல் நகைச்சுவையில் கருத்தினை சொல்ல நினைப்பவர் நடிகர் விவேக், இவர் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், சல்லிக்கட்டுப் போராட்டம் என அனைத்திலும் மக்களுக்காக துணை நின்றுள்ளார்.

dec9b06191feea00dd4b0aa476b2f5c5-1

அந்த வகையில் கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், கொரோனா குறித்த விழிப்பூணர்வினை சமூக வலைதளங்களில் ஏற்படுத்துவதும், விதிகளை மீறும் மக்களுக்கு கண்டனங்கள் தெரிவிப்பதும் என்றும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ட்விட்டரில் இருந்து மே 3 ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியுள்ளார்.

மே 3 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரவுள்ள நிலையில் விவேக் இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...