சொன்ன வாக்கை காப்பாற்றிய விஷ்ணு… டோண்ட் கேர் போட்டுட்டு போன மாயா… அடக்கொடுமையே!…

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி சமீபத்தில் மிகக்கோலாகலமாக நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அர்ச்சனாதான் டைட்டில் வின்னாரானார்.

ஆனால் அந்த முதல் இடத்திற்கு அர்ச்சனாவிற்கு போட்டியாக இருந்தது மாயா. ஆரம்பம் முதலே மாயா என்ன ஒரு லூட்டி அடித்தாலும் அதை கமல் கண்டுகொள்ளவில்லை என்ற பல கருத்துகளும் உலாவின. ஆனால் இறுதியில் அர்ச்சனாவே அதிகப்படியான வாக்குகளை பெற்று போட்டியின் வெற்றியாளராக மாறினார்.

இதான் பொங்கல் விருந்து.. வெளியான The Goat படத்தின் புது போஸ்டர்.. விஜய் கூட இவங்களும் இருக்காங்களா..

பிக்பாஸ் போட்டியில் கடைசியில் ஒரு பிரிவுகளாகவே மாறினர் அக்கிருந்த போட்டியாளர்கள். விஷ்ணு, மணி, தினேஷ், அர்ச்சனா போன்ற போட்டியாளர்களுக்கிடையே பிணைப்பு அதிகமாய் இருந்தது. மாயாவுடன் பூர்ணிமாவை தவிர வேறு எவரும் பெரிய அளவில் பழகவில்லை என்றுதான் கூறவேண்டும்.

மேலும் விஷ்ணு, மணி, தினேஷ், அர்ச்சனா நான்கு பேரும் இணைந்த குழுவில் யார் வென்றாலும் தான் 10000வாலா வெடியை வாங்கி வெடிப்பேன் என ஏற்கனவே விஷ்ணு கூறியிருந்தார். இது மாயா போட்டியில் வென்று விடக்கூடாது எனும் எண்ணத்தில் கூறப்பட்டதே.

அடுத்த கமல்ஹாசன் என்று போற்றப்பட்டவர் அட்ரஸே இல்லாமல் போன பரிதாபம் : காஜா ஷெரீப் தற்போதைய நிலை

ஆனால் தற்போது அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தான் சொன்ன வாக்கை காப்பாற்றியுள்ளர் நடிகர் விஷ்ணு. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தனது தெருவில் 10000 வாலா வெடியை வெடித்து தனது ஆனந்தத்தை காட்டியுள்ளார்.

ஆனால் இது எதையுமே கண்டுகொள்ளாத மாயாவிற்கு பூர்ணிமா தனது ஸ்டைலில் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளார். அதன்படி மாயா தனது காரை விட்டு வெளியே இறங்குபோதே மயிலாட்டம், ஒயிலாட்டம் என பல கலைஞர்களை வரவழைத்து மாயாவும் பூர்ணிமாவும் மிகவும் சந்தோஷமாக தெருவில் ஆடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னும் ரிலீஸ் ஆகாத கமல் படத்தில் அறிமுகம்.. அனைத்து சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகரான பசுபதி..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.