கண்ணுலையும் காதுலையும் ரத்தம் தான் வருது!.. விஷாலின் ரத்னம் பட விமர்சனம் இதோ.. வச்சு செஞ்சிடுச்சு!

யானை படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஹரி இயக்கிய படம் தான் ரத்னம். விஷால், பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளனர். ஹரி படம் என்றாலே கிராமத்து டச், சென்டிமென்ட், ஆக்‌ஷன், சேஸிங் என இருக்கும். அதையெல்லாம் எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு அதையெல்லாம் எக்ஸ்ட்ராவாகவே அள்ளிக் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

ரத்னம் விமர்சனம்:

புதிய படம் பார்க்க போன ரசிகர்களின் நிலைமை தான் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுக்கு தாமிரபரணி படத்தையே ரீ ரிலீஸ் செய்தால் ஜாலியாக வைப் பண்ணிட்டு ரசிகர்கள் பார்த்திருப்பார்களே என சொல்ல வைக்கிறது.

நீட் தேர்வுக்காக படித்து வரும் நாயகி பிரியா பவானி சங்கரை நடிகர் முரளி ஷர்மா கொல்ல பிளான் செய்கிறார். எம்.எல்.ஏ.வாக அரசியல் செய்து வரும் சமுத்திரகனியின் அடியாளாக இருக்கும் விஷால் பிரியா பவானி சங்கரை வில்லனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ரத்னம் படத்தின் கதை.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என எல்லாமே சுமார் ரகம் தான். புஷ்பா படத்திற்கு அவர் வித்தியாசமாக முயற்சித்து போட்டதை போல போடவே இல்லை.

இயக்குநர் ஹரி அதே பழைய டெம்பிளேட் கதையை மீண்டும் தூசி தட்டி விஷால், பிரியா பவானி சங்கரை வைத்து எடுத்து ஹிட் ஆக்கி விடலாம் என எப்படி நினைத்தார் என்றே தெரியவில்லை. சுமாரான படத்தை எடுத்து விட்டு பல விதமான புரமோஷன்களை பண்ணாலும் பலனிள்ளை ராசா என்பதை நிச்சயம் ரத்னம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் காட்டி விடும்.

விஷால் ஏன் பிரியா பவானி சங்கரை காப்பாற்ற துடிக்கிறார் என்பதற்கு ஹரி வச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்ட் அதை மட்டும் என் லைஃப்ல மறக்கவே மாட்டேன் என படத்தை பார்த்த ஒவ்வொருவரும் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு ட்விஸ்ட்டை இயக்குநர் ஹரி இந்த படத்தில் வைத்துள்ளார். அது படத்திற்கு பலமாக அமையுமா? அல்லது அதுவே பாதகமாக அமையுமா? என்பது ரசிகர்கள் கையில் தான் உள்ளது.

யோகி பாபுவின் காமெடி டிராக் ஹரி படங்களுக்கே உரித்தானது போல கொஞ்சமும் சிரிப்பு வரல பாஸ் என்கிற ரகம் தான். யோகி பாபு காமெடி டிராக்கிற்கு ஹரி செலவு செய்திருக்கவே வேண்டாம்.

சமுத்திரகனி, கெளதம் மேனன் நல்லா தங்களுக்கு கொடுத்த ரோலில் நடித்துள்ளனர். அலா வைகுந்தபுரமுலோ, குஷி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து அசத்திய முரளி ஷர்மா இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார்.

அரைச்ச மாவை அரைப்போமா என்கிற கதை தான். வசனங்கள், ஆக்‌ஷன் காட்சிகள், ரொமான்ஸ், காமெடி என எதுவுமே பெரிதாக ஈர்க்கவில்லை.

ரத்னம் – மண்ட பத்திரம்!

ரேட்டிங் – 2/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...