விருச்சிகம் வைகாசி மாத ராசி பலன் 2024!

விருச்சிக ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்தில் சூர்ய பகவான் இட அமர்வு செய்துள்ளார். வாழ்க்கைத் துணையின் வீட்டார் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கப் பெறும்.

வாழ்க்கைத் துணை உங்களுக்குப் பொருளாதாரரீதியாக பக்க பலமாக இருப்பார். மேலும் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வானது கிடைக்கப் பெறும்.

நீங்கள் நினைத்த விஷயங்கள் அனைத்தும் நடந்தே தீரும். மிகவும் யோகமான காலகட்டமாக இது இருக்கும். இதுவரை வேலை பார்த்துவந்த நீங்கள் தொழில் துவங்க வேண்டும் என்ற உங்களின் ஆசையினை நனவாக்குவீர்கள்; மேலும் நீங்கள் புதிதாக துவங்கிய தொழிலுக்கு எதிர்பார்த்ததைவிட வரவேற்பு சற்று அதிகமாகவே இருக்கும்.

அரசு அல்லது அரசாங்கம் சார்ந்த முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கப் பெறும்; இதன்மூலம் அரசின் உதவிகளை நீங்கள் பெற வழிவகையானது கிடைக்கப் பெறும்.

பொருளாதாரம் என்று பார்க்கையில் பணத்திற்குப் பெரிய அளவில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. மேலும் கௌரவத்திற்கு எந்தவொரு குறைபாடும் கிடையாது.

9 ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில் சுக்கிர பகவானுடன் செவ்வாய் பகவான் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கிறார். இந்த மாதத்தில் அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்; சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கப் பெறும்.

வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. செவ்வாய் பகவானும் சுக்கிர பகவானும் சேர்ந்து இருப்பதால் வீண் விரயச் செலவாக மருத்துவச் செலவு கட்டாயம் ஏற்படும்.

மேலும் குழந்தை பாக்கியத்துக்காக காத்திருப்போருக்கு நிச்சயம் ப்ராப்தம் ஏற்படும். வண்டி, வாகனங்களை ஆக்ரோஷமாக ஓட்டிச் செல்லாமல் நிதானத்துடன் செல்வது நல்லது.

நிறைய விஷயங்கள் நீங்கள் நினைத்ததைப் போலவே நடக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த கல்லூரிகளில் சீட் கிடைக்கப் பெறும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வந்தால் உங்களின் மனோபலம் அதிகரிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews