விருச்சிகம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

விருச்சிகம் சுபகிருது வருட பலன்கள்

மன உறுதிமிக்க குணம் கொண்ட விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் சுமாரான வருடமாக இருக்கும்.

உடல் நிலையினைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். மன நிலையினைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் சரியாகி தெளிவு பிறக்கும்.

பொருளாதார ரீதியாக நீங்கள் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும் அதனைத் தாங்கிக் கொள்ளும் குணம் உங்களுக்கு உண்டு. பேசும்போது தேள் கொட்டுவதுபோல் பேசும் பழக்கத்தினை தவிர்க்க வேண்டும்.

சகோதர- சகோதரிகளுடனான உறவு மேம்படும், அவர்களால் குடும்பத்தில் நன்மை பயக்கும். தாய், தந்தை உடல் நலனில் பிரச்சினைகள் சரியாகும். புதிதாக வீடு கட்டவோ அல்லது புதிதாக வீடு வாங்கவோ ஏற்ற காலமாக உள்ளது.

அதுபோக வண்டி, வாகனங்கள் வாங்க நினைத்த உங்கள் கனவு நனவாகும். குல தெய்வத்தின் பார்வை உங்கள்மீது சிறப்பாக உள்ளது. உடல்நிலையினைப் பொறுத்தவரை சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும். கடன் வாங்காமல் இருப்பதை வைத்துச் சமாளிப்பது நல்லது.

புதிதாக பணம் கிடைத்தாலும் விரைவில் கரைந்து போகும், அதனால் சேமிப்பில் கவனம் செலுத்துதல் நல்லது. பல ஆண்டு கைகூடாத திருமணம்கூட நிச்சயம் கை கூடும். பிரிந்து இருந்த கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.