விருச்சிகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

செவ்வாய் பார்வையில் விருச்சிகமும், ராகு – கேது 6 மற்றும் 8 வது இடங்களிலும் உள்ளது. 5 ஆம் இடத்தில் குரு வக்கிரம், 3 ஆம் இடத்தில் சனி வக்கிரம், 10 ஆம் இடத்தில் சூர்யன்- சுக்கிரன், 11 ஆம் இடத்தில் புதன் உள்ளது.

கோள்களின் இட அமைவு விருச்சிகத்திற்கு  மிகவும் சாதகமாக உள்ளது. வேலைவாய்ப்பு ரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, எதிர்பார்த்திருந்த இடமாற்றம் என வேலைசார்ந்த விஷயங்களில் மன நிறைவுடன் காணப்படுவீர்கள்.

தொழிலில் பணப் புழக்கம் அதிகமாகவே இருக்கும், அபி விருத்தி செய்யும் திட்டம் இருந்தால் சிறிதும் தயங்காமல் செய்யவும். திருமணம் சார்ந்த விஷயங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி வரன்கள் கைகூடிவரும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் பெருமை சேர்க்கும் அளவு சிறந்து விளங்குவர்.

மேலும் வீடு, மனை வாங்க நினைப்போருக்கு கைமேல் பலன் கிடைக்கும் காலமாக இருக்கும். வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான அனுகூலங்கள் உண்டு. பூர்விகச் சொத்துகள் வீடு தேடி வந்து சேரும்.

பழைய கடன்களை அடைப்பீர்கள், உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகி, சுமுகமான உறவு தொடரும். உடல் ஆரோக்கியம் ரீதியாக மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment