விருச்சிகம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

2 மற்றும் 3 ஆம் வீடுகளுக்கு இடையே குரு ஆட்சி பீடத்திலும், சனி பகவான் விபரீத அற்புதங்களைச் செய்யும் இட அமைப்பிலும், 6 ஆம் இடத்தில் இராகு பகவான் அஷ்ட லட்சுமி யோகத்தினைக் கொடுக்கவுள்ளார்.

வாழ்க்கைத் துணையால் யோக பாக்கியம் கிடைக்கும், தொழில் மற்றும் உத்தியோகம் நிமித்தமாக மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். ஆன்மிகப் பயணங்கள் செல்வீர்கள், 1 மற்றும் 9 ஆம் வீட்டை குரு பார்க்க, 5 ஆம் வீட்டில் குரு இருக்க என அமோகமான இட அமைவு சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் காலமாக இருக்கும். நல்ல பணவரவு, பொருள் வரவு என அனைத்தையும் எதிர்பார்க்கலாம். செல்வாக்கு மற்றும் சொல்வாக்கு என பெருமைமிக்கு காணப்படுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியினை அள்ளிக் கொடுக்கும். வண்டி, வாகனங்களால் வருமானமும், அசையாச் சொத்துகளால் லாபமும் கிடைக்கும்.

5 இல் குரு கெஞ்சினாலும் கிடைக்காது என்பதுபோல் மன மகிழ்ச்சியால் நிறைந்து காணப்படுவீர்கள். குழந்தைகள் கல்வியில் மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.

7 ஆம் இடத்தில் செவ்வாய் 22 நாட்களுக்கு இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சந்திராஷ்டம நாட்களில் பொறுமை, நிதானத்துடன் செயல்படுதல் வேண்டும்.

பிள்ளையாரை வழிபாடு செய்தல் நன்மையினைப் பயக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.