விருச்சிகம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

5 ஆம் இடத்தில் குரு பகவான், 3 ஆம் இடத்தில் சனி பகவான் என இட அமைவு உள்ளது. சுக்கிரன், சூர்யன், புதன் நேர்கோட்டில் இடப் பெயர்ச்சி செய்யவுள்ளது. வேலைவாய்ப்புரீதியாக எடுக்கும் சம்பள உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வு என நீங்கள் எதிர்பார்த்தது நனவாகும்.

தொழில்ரீதியாக தயங்காமல் முதலீடு செய்யலாம். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம்.

அசையும், அசையாச் சொத்துகளில் தாராளமாகச் சேமிக்கலாம். ஆக்கப்பூர்வமான பலனைக் கொடுக்கும் மாதமாக நவம்பர் மாதம் இருக்கும்.

சனி பகவானி இடையூறு பெரிய பாதிப்பினைக் கொடுக்காது, குரு, சுக்கிரன், சூர்யன், புதன், செவ்வாய் என கோள்களின் இடப் பெயர்ச்சி அம்சமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் ஈடேறு, முயற்சி கைகொடுக்கும்.

இதுவரை திருமண காரியங்கள் தள்ளிப்போய் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்தது போன்றதொரு வரன் அமையப் பெறும். மாணவர்கள் கல்விரீதியாக தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆசைப்பட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம் ரீதியாக சிறப்பாக இருப்பீர்கள். மனரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment