விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2023!

மார்ச் மாதத்தின் முற்பகுதியில் கோள்களின் நகர்வு உங்களுக்குச் சாதகமானதாக உள்ளது. சூர்யன் 4 ஆம் இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளின் பாராட்டு, சக பணியாளர்கள் மத்தியில் மரியாதை உயர்தல் என்பது போன்ற விஷயங்கள் நடந்தேறும்.

தொழில் ரீதியாக லாபம் இரண்டு மடங்காக இருக்கும், தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருப்பதால் திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும் காலமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பேசினால் கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். முடிந்தளவு பேசக்கூடாத இடங்களில் பேசாமல் இருத்தல் நல்லது.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் முதல் பாதியில் உடல் நலத்துடன் காணப்படுவீர்கள். இரண்டாம் பாதியில் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் அனுசரணை அதிகமாக இருக்கும். மூன்றாம்  நபர்களின் தலையீட்டை முடிந்தளவு தவிர்க்கவும்.

மாணவர்கள் கல்விரீதியாக கவனச் சிதறல்கள் நிறைந்து காணப்படுவர். வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சியினைத் தள்ளிப் போடவும். வெளியூர்ப் பயணங்கள், இரவு நேரப் பயணங்கள் செய்யும்போது கவனமுடன் இருத்தல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.