விருச்சிகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை செவ்வாய் 8ஆம் இடத்தில், சனி பகவான் 4ஆம் இடத்தில், குரு பகவான் – சூர்ய பகவான் 6ஆம் இடத்தில் என கோள்களின் இட அமைவு உள்ளது. சூர்யன் 6ஆம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை போராட்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும், எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் இருக்கும். சக பணியாளர்களுடனும், மேல் அதிகாரிகளுடனும் வாக்கு வாதங்கள் செய்யாமல் தவிர்த்தல் நல்லது.

குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி எந்தவொரு புது முயற்சிகளுக்கும் எதிர்ப்பு கடுமையாக இருக்கும். 6ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவானால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானித்து எடுத்து வைத்தல் வேண்டும்.

தொழில்ரீதியாக எந்தவொரு திட்டமிடலையும் செய்ய முடியாமல் போராட்டமாக இருக்கும். மேலும் தொழில் கூட்டாளர்களுடனான பணம் சார்ந்த பரிமாற்றங்களில் கவனம் தேவை.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான சிறு சிறு வாக்குவாதங்களும் பெரும் பிரிவுக்கு இட்டுச் செல்லும். உடன் பிறப்புகளுடன் பூர்விகச் சொத்துகள்ரீதியாக சண்டைகள் ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரை கடுமையான காலமாக இதனை உணர்வார்கள்.

திருமண காரியங்களில் தடைகள் நீடிக்கும்; முடிந்தேறிவிடும் என்று நினைத்த திருமணங்களும் தள்ளிப் போகும். கடன் கொடுக்கல், வாங்கலில் மிக எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews