ஜோதிடம்

விருச்சிகம் ஆடி மாத ராசி பலன் 2022!

ஐந்தில் குரு பகவான் ஆறாம் இடத்தில் செவ்வாய் பகவான் அமைந்துள்ளதால் நடக்கும் விஷயங்கள் சற்று இழுத்தாலும் ஆதாயம் சிறப்பானதாக அமையும். மேலும் தேவையில்லாத அவப் பெயர்களும் கிடைக்கப் பெறும், வாக்கு ஸ்தானத்தால் தொழில் கூட்டாளர்களிடையே பிரச்சினைகள் வலுப்பெறும்.

சூரியன் – புதன் இணைவால் தொழில் அபிவிருத்தி, சிறப்பான லாபம் கிடைக்கப் பெறும். வெளிநாடுகளில் வசிப்போருக்கு மிகச் சிறந்த காலகட்டமாகவே உள்ளது. பணவரவு, புதிய வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சியுற்று இருப்பர் வெளிநாட்டில் வசிப்போர்.

கணவன் – மனைவி இடையேயான பிரச்சினை பெரிய அளவிலான பிரிவுக்கு வழிவகுக்கும், அதனால் கூடுதல் நிதானத்துடன் செயல்படுதல் வேண்டும். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும், மேலும் திருமணம் சார்ந்த காரியங்கள் கைகூடும்.

சுபச் செலவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். வீடு, மனை வாங்குதல் என பல புதிய விஷயங்களில் கடன்பட்டாவது கால் பதிப்பீர்கள். வேலை ரீதியாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த உயர் பதவிகள் கிடைக்கப் பெறும்.

குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருந்தோருக்கு நற் செய்தி வந்து சேரும். புதிதாக வீடு கட்ட துவங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் படிப்பில் மேம்பட்டு இருப்பர். உடல் நலனில் தற்போது மேம்பட்டு காணப்படுவீர்கள்.

பைரவர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

Published by
Gayathri A

Recent Posts