தோனி ரெக்கார்டை சமன் செய்து.. கெயில் சாதனையை தவிடு பொடியாக்கிய கோலி.. இனி ஐபிஎல்ல இவர் ராஜ்ஜியம் தான்..

நடப்பு ஐபிஎல் தொடரான 17 வது சீசனில் இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆறு போட்டியிலுமே ஒரு சிறப்பான கனெக்ஷன் உள்ளது. அதாவது, இந்த ஆறிலும் ஹோம் கிரவுண்ட்டில் ஆடிய அணிகள் தான் வெற்றி கண்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கண்டிருந்த நிலையில், அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜாஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என அனைத்து அணிகளுமே தங்கள் சொந்த மைதானத்தில் வெற்றி கண்டது.

இதற்கு அடுத்தபடியாக, இந்த சீசனின் 7 வது போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

முன்னதாக கடைசியாக நடந்து முடிந்த போட்டியில், ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து அவுட்டானது போல சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தார். 49 பந்துகளில் 11 ஃபோர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதி கட்டத்தில் இலக்கு சற்று நெருக்கடியாக இருந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 3 ஃபோர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்ததால் 4 பந்துகள் மீதம் வைத்து ஆர்சிபி அணி முதல் வெற்றியையும் இந்த சீசனில் பதிவு செய்தது.

மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதிலும் தனியாளாக போராடிய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார். டி 20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால் டி 20 உலக கோப்பையில் கோலி இடம்பெறமாட்டார் என விமர்சனம் உருவாகி இருந்த நிலையில், தனது பேட் மூலம் பதில் சொன்ன கோலி, இது பற்றி மறைமுகமாகவும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த சீசன் முழுக்க நல்ல ஃபார்முடன் ஆடி நிச்சயம் அதிக ரன்களை கோலி குவிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அப்படி ஒரு சூழலில், 77 ரன்களை இந்த போட்டியில் அடித்ததன் மூலம் சில முக்கியமான சாதனையையும் ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார் கோலி.

ஐபிஎல் தொடரில் சேசிங் செய்யும் போது அதிக 50+ அடித்த வீரர்கள் பட்டியலில் தவானை தாண்டி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் கோலி (23). இதே போல, 70+ ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கெயிலை முந்தி முதலிடம் பிடித்த கோலி (27 முறை), அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீர்ரகள் பட்டியலில் தோனியின் எண்ணையும் (17 முறை) சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...