கெளதம் மேனனே நினைத்தாலும் இனி முடியாது.. 750 நாட்கள் ரீ ரிலீஸில் சாதனை படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா!

சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரை அரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 750 நாட்களை கடந்து ஓடி பெரும் சாதனையை படைத்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 2010 பிப்ரவரி 26ம் தேது வெளியானது. மேலும் இன்றுடன் இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிறது. இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு காதல் காவியமாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சமந்தா, நாக சைதன்யா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஜனனி, உமா பத்பநாபன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

750 நாட்கள் ஓடிய விண்ணைத்தாண்டி வருவாயா:

திரை அரங்குகளில் மறு வெளியிடப்பட்டு அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலில் ஷாருக்கானின் “தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே” இடம்பெற்றுள்ளது. அதை தொடர்ந்து கோலிவுட்டிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படத்தில் அதிக நாட்கள் ஒடிய படமாக சிலம்பரசனின் விண்ணைத் தாண்டி வருவாயா இடம்பெற்று பெருமையை சேர்த்துள்ளது.

14 வருடங்களுக்கு முன் ரீலிஸான விண்ணைத் தாண்டி வருவாயா படம் அன்றைய யூத்களை மற்றும் காதலர்கள் மனதை கவர்ந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இப்படத்தை ரீ ரிலிஸ் செய்திருந்தாலும் இப்போதைய இளைஞர்கள் மற்றும் காதலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும், கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அதை தொடர்ந்து நேற்று சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த பலரும் சிம்பு வெப்சீரீஸ் நடிக்க போறாரா, இது என்ன கேம் அஃப் த்ரோன்ஸ் அளவுக்கு இருக்கு, இப்படி படம் வந்தா சிம்பு படம் கூட பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

சிலம்பரசன் மற்றும் த்ரிஷாவுக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து பல படங்கள் பெரிதாக ஓடவில்லை. விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம் மூலமாக த்ரிஷா கம்பேக் கொடுத்தார். சிம்புவுக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு படம் அவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக குந்தவை கதாப்பாத்திரத்தில் தன் அசாதாரமான நடிப்பை வெளிப்படுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அதை தொடர்ந்து விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் சென்னையிலுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 750 நாட்களுக்கு மேலாக ஒடி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்படம் சிம்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களையும் கவர காரணமே காதலை தாண்டி ஒரு உதவி இயக்குநரின் கனவு மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல், கெளதம் மேனனின் ரொமான்டிக் டச் உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லலாம். இந்த படத்திற்கு பிறகு அவராலே இன்னொரு படத்தை இதை போல கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.