உருவ கேலி குறித்து தீர விசாரிக்க வேண்டும் என கமலிடம் வேண்டுகோள் வைக்கும் வினுஷா தேவி!

பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 38 நாட்கள் நிறைவடைந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பெரிய சர்ச்சைகள் அவ்வபோது வெடித்து வருகிறது. கெட்ட வார்த்தைகள் பேசுவது, உருவ கேலி செய்வது, கும்பலாக சேர்ந்து கொண்டு பிறரை மனரீதியாக காயப்படுத்துவது, டபுள் மீனிங் வசனங்களை பேசுவது என சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இந்த நிகழ்ச்சி நாள்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நேற்று அதாவது நவம்பர் எட்டாம் தேதி ஒளிபரப்பான டாஸ்கில் இந்த வீட்டில் இருக்கும் நபர்கள் சொன்ன கமெண்ட்கள் காட்டப்படும், அதை சொன்ன நபர்கள் ஏன் சொன்னார்கள் என விளக்கி சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு கமெண்ட் காட்டப்பட்டிருந்தது, அதில் வினுஷா வேலைக்காரி. அவர் என்னோட டைப் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்று அட்ராக்ட் ஆகணும். இல்ல எனக்கு வந்து உடம்பு பர்ஃபெக்ட்டா இருக்கணும். இது இதுக்கேத்த மாதிரி இது இது இதுக்கேத்த இது அப்படின்னு, ஆனால் வினுஷாக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு.. அவங்க கண்ணு நல்லா இருக்கு. டிரஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு அது ஓகே. பூர்ணிமாக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரி நிக்சன் பேசியிருந்த வார்த்தை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வார்த்தைகள் அனைத்தும் சில நாட்களுக்கு முன்னதாக நிக்சன் மற்றும் ஐஸ்வர்யா இடையே பேசிக்கொண்ட விஷயங்கள் இதற்கு நிக்சன் விளக்கம் கொடுக்க வேண்டும். அதற்கு நிக்சன் தான் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும் நம்புபவர்கள் நம்புங்க இல்லாட்டி போங்க நான் விளையாட்டாக தான் பேசினேன் அதுக்காக வினுஷாவிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

நிக்சன் உருவ கேலி செய்தது மட்டுமல்லாமல் அதை உண்மையாகும் பட்சத்தில் பேசியிருந்ததை எதிர்த்து ரசிகர்கள் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன அது குறித்து வினிஷா தேவி சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் இப்பொழுது பிக் பாஸ் வீட்டில் இல்லை என்றாலும் இந்த சர்ச்சைகள் குறித்து பேசவும் எனக்காக ஸ்டாண்ட் பண்றதுக்கும் விரும்பறேன். முதல் வாரத்தில் நிக்சனுக்கும் எனக்கும் நல்ல பழக்கம் இருந்தது. நான் முதலில் நிக்சனை நல்ல சகோதரனாகத் தான் பார்த்தேன். நான் அவர்கிட்ட அப்படித்தான் நடந்துகிட்டேன். ஆரம்பத்தில் நிக்சன் என்னை கேலி செய்த பொழுது நான் எதையும் கண்டுகொள்ளவில்லை. அதை நான் கேலியாக எடுத்துக் கொண்டேன். நாட்கள் செல்ல செல்ல நிக்சன் எல்லை மீற ஆரம்பித்தார்.

மேலும் அவரோட நடவடிக்கைகள் மனதை கஷ்டப்படுத்தும் விதமாக அமைந்ததால் ரோல் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி வினுஷா கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பின் இந்த ட்ரோல் சம்பவத்துக்காக மட்டுமே ஒரு நாள் அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டார். ஆனால் என்னை உருவ கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்கவில்லை.

விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட அசின்.. தட்டிப் பறித்த திரிஷா! எந்த படத்தில் தெரியுமா?

மேலும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயம் என கூறி வினுஷா குறிப்பிட்டுள்ளவை, நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது நிக்சன் என்னை உருவ கேலி செய்தது, அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் இது எல்லாம் எனக்கு தெரிந்தது போன்று நிக்சன் விளக்கம் கொடுத்திருப்பது முற்றிலும் மறுக்கக்கூடிய தகவல். இந்த தகவல் நான் அங்கு இருக்கும் போது எனக்கு தெரியாது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு நான் தெரிந்து கொண்டேன். நடந்து முடிந்த சம்பவத்திற்கு இப்பொழுது நிக்சன் மன்னிப்பு கேட்பது சரியான விஷயம் அல்ல அது அவரை நல்ல நபராக மாற்றி விடாது.

மேலும் புள்ளிகோ கேங் என்னும் மாயா, ஜோவிகா,பூர்ணிமா, ஐஸ்வர்யா என கடந்த வாரம் உரிமைக் குரல் எழுப்பிய பெண்ணியவாதிகள் இப்போது எங்கு சென்றார்கள். எனக்காக குரல் எழுப்பிய விசித்ராவிற்கு நன்றி. நிக்சன் என்னை பற்றி கூறிய வீடியோ மற்றும் கருத்தில் பின் எனக்கு அவர் மேல் இருந்த மரியாதை முற்றிலும் குறைந்து விட்டது. வார இறுதியில் கமல் சார் இந்த விவகாரம் குறித்து கண்டிப்பாக பேசவேண்டும் என வினுஷா குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...