வினைப்பயன் தீர்க்கும் பிரதோஷ காலத்தில் சொல்லவேண்டிய மந்திரம் -தினம் ஒரு மந்திரம்

அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களுக்கு மூன்று நாட்களுக்கு முந்தைய நாளே பிரதோஷமாகும். அன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ காலம் எனப்படும் மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை நந்திக்கு அபிஷேகம் செய்விக்கப்படும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இந்த மந்திரத்தினை சொல்லி நற்பலன் பெறலாம்

மந்திரம்

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:

மேற்காணும் மந்திரத்தினை பிரதோச வேளையில் 18முறை சொல்லவேண்டும். கூடவே, காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும். பிரதோச வழிபாட்டை மனிதர்கள் மட்டுமல்லாமல் தேவர்களும், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்களும் மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது..

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews