பொழுதுபோக்கு

லியோ ஃபீவரே இன்னும் முடியல!.. அதுக்குள்ள தளபதி 68 பூஜை வீடியோ வந்துடுச்சே!.. இவ்ளோ நடிகர்களா?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகி ஐந்து நாட்களில் சுமார் 450 கோடி வரை வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்தின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களின் வசூலை லியோ முறியடிக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ படத்தின் வசூலையும் முதல் வாரத்தில் முந்தி உள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ்களே செய்திகளை வெளியிட்டுள்ளன.

லியோ ஃபீவர்

லியோ படத்தின் ஃபீவரில் இருந்து ரசிகர்கள் இன்னும் வெளி வராத நிலையில், அதற்குள் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டு ஏஜிஎஸ் நிறுவனம் அதகளப்படுத்தியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், யோகி பாபு, சினேகா, லைலா, அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக அறிவித்துள்ளனர்.

தளபதி 68 பூஜை வீடியோ

மேலும் படத்தின் பூஜை விழாவில் நடிகர்கள் பங்கேற்ற காட்சிகளை வைத்து ஆன் போர்டு அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு வெங்கட் பிரபுவின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி 68 படத்தின் பூஜை விழாவில் நடிகர் விஜய் டி-ஷர்ட் அணிந்து கொண்டு அழகில் அனைவருக்கும் டப் கொடுக்கும் விதமாக செம யூத் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்து உள்ளார்.

வசீகரா மாதிரி இருக்குமா?

வசீகரா படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் இணைந்து சினேகா நடிக்க உள்ள நிலையில், அந்தப் படத்தைப் போலவே ஜாலியான குடும்ப படமாக தளபதி 68 இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

லியோ படத்தின் மார்க்கெட் அதிகரித்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 68 படத்துக்கு நடிகர் விஜய்க்கு மட்டும் 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலையில் படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாயா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

400 கோடி பட்ஜெட்?

ஏனென்றால் படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்து வரும் நிலையில், அவர்களுக்கான சம்பளம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான சம்பளம் மட்டுமே 100 கோடி ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பு செலவுக்காக 100 கோடி ரூபாய் வரை செலவிட படலாம் என்பதால் இந்தப் படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் வரை செல்லும் என கூறுகின்றனர்.

 

Published by
Sarath

Recent Posts