விஜய்யின் அடுத்து 3 ஆண்டு திட்டம்! வெளியான ரகசிய தகவல்!

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் அரசியல் களத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்று இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய பிரபலமாக உருவாகியுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி வருகிறார்.

விஜய் அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

ஏற்கனவே அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சில நிகழ்ச்சிகளையும் நடத்தினார். மேலும் உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

இதனை அடுத்து 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் சூசகமாக நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனது அரசியல் பயணத்தை பற்றி கூறியிருந்தார். இந்நிலையில் சினிமாவில் இருந்து மூன்று ஆண்டுகள் ஓய்வு எடுப்பதாக கூறியிருந்த விஜய் அந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் களத்தில் முழுவதுமாக இயங்க போவதாக கூறப்படுகிறது.

யோகிபாபுக்கு தல டோனி கொடுத்த ஐபில் வாய்ப்பு.. ஒரு நொடி அதிர்ந்து போன அரங்கம்!

அதன்படி 2025 ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை விஜய் கட்சி ஆரம்பித்தால் விஜய்யும் கமலும் இணைவார்களா, இல்லை எதிரிகள் ஆவர்களா, இல்லை ரஜினி போல பின்வாங்குவாரா என்ற கேள்விகளுக்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...