பொழுதுபோக்கு

மாதம் 5-ம் தேதியான சம்பளம்… இயக்குனர் ஷங்கரை காப்பாற்றிய விஜய் அப்பா எஸ்ஏசி!

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை திரைக்கு கொண்டுவருவதில் தற்போது பிஸியாக உள்ளார். இயக்குனர் ஷங்கர் ஜென்டில்மேன் படம் தொடங்கி தற்போது இந்தியன் 2 வரை பல படங்களை இயக்கி உள்ளார். அவர் இயக்கிய பல படங்கள் மெகாஹிட் படங்கள். ஷங்கர் படம் இயக்கும் விதம் மிக பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய ஒரு படத்தில் நடித்தால் போதும் என்று காத்திருக்கும் நடிகர்கள் ஏராளம்.

ஷங்கர் இவ்வளவு தூரம் வளர அவரது உழைப்பு காரணம் என்றால், ஆரம்பத்தில் அவருக்கு உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்து, மாதம் மாதம் சம்பளமும் கொடுத்த நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அதில் மிக முக்கிய பங்குண்டு.

இதனை ஒருமுறை பேட்டியில் கூட ஷங்கர் கூறியிருக்கிறார். இயக்குனர் ஷங்கர் டி.எம்.இ. படிச்சி முடித்துவிட்டு, ஒரு ஃபேக்டரியில் வேலைக்குப் போய் கொண்டிருந்தார். ஆனால் ஸ்டிரைக் நடந்து ஃபேக்டரியை மூடிவிட்டார்கள். ஷங்கருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது தீராத ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அவரது அப்பாவுக்கு மகன் சினிமாவுக்குள் போவதில் துளியும் விருப்பம் இல்லை. அவருடைய அம்மாவுக்கும் அப்படித்தான்.

பாக்யராஜ் இயக்கிய ஒரே த்ரில்லர் படம்.. மக்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்ததா?

ஷங்கரின் அம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாதாம். ஆனாலும் மகன் நல்ல வேலைக்கு போய் பெரிய ஆளாக வர வேண்டும் என்று விரும்பி உள்ளார். ஆனாலும் பேப்பர்ல டி.எம்.இ. படிப்புக்கு ஆட்கள் தேவை விளம்பரம் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருப்பாராம். ஆங்கிலத்தில் வந்திருக்கிற அந்த விளம்பரங்களை, கண்டுபிடித்து, ஷங்கரிடம் காட்டி வேலைக்கு சேருமாறு கூறுவாராம்.

ஆனால் சினிமா தான் வாழ்க்கை என்பதில் உறுதியாக இருந்துள்ளார் ஷங்கர். நாடகங்களில் நடித்து வந்த ஷங்கரை எஸ்.ஏ.சந்திரசேகர் தான், சினிமாவுக்குள்ளே கொண்டு வந்தள்ளார். தன்னுடைய உதவி டைரக்டராக ஷங்கரை சேர்த்துக் கொண்டார்.

மகன் உதவி இயக்குனரானதை ஷங்கரின் அப்பா சுத்தமாக விரும்பவில்லை. ‘என்ன இவன் இப்படிப் பண்றான்’ என்று வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பாராம்.

ஷங்கர் படத்தில் அறிமுகமான நடிகை.. மருமகளாக ஏற்று கொள்ள மறுத்த முதலமைச்சர்.. என்ன நடந்தது..?

இந்த சமயத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் மாதாமாதம் 5ம் தேதியானவுடன் சம்பளம் கொடுப்பாராம். இந்தச் சம்பளம் மாதாமாதம் குறிப்பிட்ட தேதியில் கிடைத்ததால், ஷங்கரின் அப்பா நிம்மதி அடைந்துள்ளார். அதனால் தான் சினிமா வேலையை ஷங்கர் அப்பா ஏற்றுக்கொண்டாராம். எஸ்ஏசி கொடுத்த 5-ம் தேதி சம்பளம்தான் அவரை காப்பாற்றியதாம். இதை ஷங்கரே பிரபல ஊடகத்தின் பேட்டி ஒன்றில் முன்பு கூறியுள்ளார்.

Published by
Keerthana

Recent Posts