1 கோடி வேண்டாம்.. விளம்பரத்தில் நடிக்க மறுத்த விஜயகாந்த்.. என்ன காரணம் தெரியுமா..?

1979ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் விஜயகாந்த். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். 1984ஆம் ஆண்டு மட்டும் விஜயகாந்த் 18 படங்களில் நடித்திருந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்த் பல அவமானங்களை சந்தித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் முக்கிய நடிகர்களுக்கு ஒரு விதமான சாப்பாடும் விஜயகாந்துக்கு ஒரு விதமான சாப்பாடு வழங்கப்பட்டது. இதனால் இதுபோன்று வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று விஜயகாந்த் நினைத்தார்.

ஃபைட் மட்டுமில்லை.. நடனத்திலும் பட்டையை கிளப்பிய விஜயகாந்த்..!!

முன்னணி நடிகராக வந்த பிறகு படப்பிடிப்பு தளத்தில் அவர் சாப்பிடும் உணவை தான் அங்கு உள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதனை செய்தும் காட்டினார். அது மட்டும் இல்லாமல் பசி என்று யார் விஜயகாந்த்திடம் சென்றாலும் வயிறார உணவு வழங்கினார்.

இதனை ஏழை எளிய மக்கள் பலர் பயன்படுத்திக் கொண்டனர். இப்படி சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி உயர்ந்தவராக காணப்பட்டார் விஜயகாந்த். அதோடு விஜயகாந்த் தமிழ் மக்கள் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கோட்டை முதல் குமரி வரை.. சினேகன் பாடல் வரிகள்.. விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

வெளிநாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று விஜயகாந்த்திடம் கேட்டுள்ளனர். அதற்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் பணத்தைவிட தமிழர்களின் வாழ்க்கை தான் முக்கியம் என்று விஜயகாந்த் நினைத்துள்ளார்.

இதனால் வெளிநாட்டு குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் நான் நடித்தால் என் முகத்தைப் பார்த்து தமிழர்கள் அந்த குளிர்பானத்தை வாங்குவார்கள். ஆனால் தமிழக நிறுவனங்கள் பல இதில் பாதிக்கப்படும் என்று கூறி நிராகரித்துள்ளார்.

ஒரே நேரத்துல இரண்டு படம் நடிக்கணும்.. கொஞ்சம் கூட யோசிக்காம விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்.. அந்த அளவுக்கு சினிமா மேல அவருக்கு காதல்..

இப்படி தனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தாலும் தமிழனுக்கு எதிராக நிற்க மாட்டேன் என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருந்தார். ஆனால் இன்று தமிழகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடும் அவரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.