ஊர்வசி கூட நடிக்க முடியாது.. பிடிவாதமாக சொன்ன விஜயகாந்த்.. மனம் கலங்க வைக்கும் காரணம் இதான்..

பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து பின்னர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, அதே ரூட்டில் போய் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் மாறியவர் தான் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் முத்திரைப் பதித்து பின்னர் அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்திருந்த சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக மாறி இருந்தது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது மறைவு தமிழ்நாட்டில் உள்ள அனைவரையுமே பிரபலங்களைத் தாண்டி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் மனம் நொறுங்க வைத்திருந்தது. பலரும் விஜயகாந்த் தொடர்பான பல்வேறு விஷயங்களை நினைவு கூர்ந்து மனம் உடைந்து போக, இன்னும் விஜயகாந்த் மறைவில் இருந்து இன்னும் வெளியே வர முடியாமல் பலரும் அதற்குள்ளே சிக்கி தவிக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், பிரபல நடிகையான ஊர்வசி விஜயகாந்த் பற்றி தற்போது தெரிவித்துள்ள கருத்து பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. விஜயகாந்த் நாயகனாக நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவருடன் இணைந்து நடிக்க பல நாயகிகளும் மறுத்தார்கள். விஜயகாந்த் பற்றி பலரும் தவறான கருத்துக்களை ஹீரோயின்கள் மத்தியில் பரப்ப இதன் பெயரில் சிலர் அவருடன் நடிக்கத் தயங்கினர்.

அது மட்டுமல்லாமல், விஜயகாந்த் கருப்பாக இருப்பதால் சிலரும் அவருடன் நடிக்கத் தயங்கியதாக தகவல் தெரிவிக்க, இப்படி பல தடைகளை கடந்து முன்னேறிய விஜயகாந்த்துடன் யாரெல்லாம் நடிக்க மாட்டேன் என கூறினார்களோ அவர்களெல்லாம் நாயகிகளாக பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்படி ஒரு சூழலில் தான் ஊர்வசியுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதாவது ஊர்வசியை தங்கச்சி என்ற ஸ்தானத்தில் விஜயகாந்த் பார்த்ததால் அவருடன் இணைந்து நெருக்கமாக நடிக்க மறுத்த விஜயகாந்த், ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டாராம். மேலும் ஊர்வசி மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்த படங்களில் கூட, நேருக்கு நேர் முகத்தை கூட பார்க்கமாட்டார். இது பற்றி ஊர்வசி ஒரு பேட்டியில் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

அதே போல, தான் சாப்பிடும் அதே உணவை அனைவருக்கும் கொடுக்க நினைப்பார் என்றும் அவர் இல்லாத ஷூட்டிங்கில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நினைக்கும் நல்ல குணம் படைத்தவர் என்றும் நெகிழ்ச்சிப்பூர்வமாக ஊர்வசி இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...