லியோ படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.. அந்த இயக்குனரே பளிச்சென சொல்லிட்டாரே..!

லியோ படத்திற்கு நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்களை பேட்டியின் போது மேயாத மான் படம் இயக்குனர் மற்றும் லியோ படத்தின் துணை கதை ஆசிரியருமான ரத்தினகுமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

வாரிசு படத்துக்கு நடிகர் விஜய் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், தளபதி 68 படத்துக்கு அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் கடந்த சில மாதங்களாக உலாவி வருகின்றன.

லியோ படத்தில் விஜய் சம்பளம்:

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் த்ரிஷாவுடன் இணைந்து விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு நடிகர் விஜய் சுமார் 130 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக போகிற போக்கில் ரத்தினகுமார் பேட்டியின் போது கூறியுள்ளார்.

லியோ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் விஜயின் சம்பளம் 130 கோடி ரூபாய் என்றால் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள லியோ திரைப்படத்தில் மற்ற நடிகர்களின் சம்பளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களான இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர், எடிட்டர், விஷுவல் எஃபெக்ட்ஸ் என சம்பளம் மட்டுமே 220 கோடி ரூபாயாகவும் படத்தின் மேக்கிங் செலவுகள் 80 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ரத்னகுமார் சொன்ன ரகசியம்:

ரத்னகுமார் கூறும்போது, படத்தில் விஜயின் வீட்டை பிரமாண்டமாக காட்டுவதை விட 130 கோடி ரூபாய் கொடுத்து முன்னாடி நிற்கும் ஹீரோவே எவ்வளவு பெரிய பிரம்மாண்டம் அவரை எப்படி காட்ட வேண்டும் என்பதுதான் மேட்டர் என லோகேஷ் கனகராஜ் கூறியதாக ரத்னகுமார் பேட்டியில் பேசியிருந்தார்.

அக்டோபர் 19-ஆம் தேதி லியோ படம் முழுவதும் ரிலீசாக உள்ள நிலையில், அந்தப் படத்தை மேலும் பிரமோட் செய்ய நாளை மாலை 6:00 மணிக்கு மூன்றாவது சிங்களன அன்பெனும் பாடல் ரிலீசாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

3வது பாடல் நாளை ரிலீஸ்:

பார்த்திபன் விஜய் தனது மனைவி திரிஷா மற்றும் மகள் இயல் உடன் காஷ்மீரில் சந்தோசமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது இடம்பெறும் அறிமுகப் பாடலாக இந்தப் பாடல் இருக்கும் என்றும் பாடல் முடிந்த உடனே படம் சூடு பிடிக்க தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில், லியோ படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்னும் சில நாட்களில் ஆரம்பித்து விடும் என்றும் டிக்கெட் புக்கிங் ஓப்பன் ஆனால் சுமார் ஒரு வாரத்துக்கு அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் ஸ்கூல் போர்டு தான் தொங்கும் என விஜய ரசிகர்கள் உறுதியாக நம்பி காத்திருக்கின்றனர்.

பல பேர் ரிப்பீட் மோடில் அதிக தடவை லியோ படத்தை பார்க்கவும் தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews