அந்த ஒரு நடிகருக்காக மலையாள படத்தை பார்க்க விரும்பிய விஜய்.. ஜெயராமிடம் Goat ஸ்பாட்டில் சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதே வேளையில் பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் விஜய் படங்களுக்கு உள்ளதால் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராகவும் விஜய் உயர்ந்துள்ளார்.

அவரது நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியிருந்த ‘லியோ’ திரைப்படம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகவும் மாறி இருந்தது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். லியோ படத்தை தொடர்ந்து மங்காத்தா, சென்னை 28 உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ள வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘GOAT’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் தந்தை மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடிகர் விஜய் நடித்து வருவது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இது டைம் ட்ராவல் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, யோகி பாபு, லைலா, மோகன், விடிவி கணேஷ், என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போதே அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஒரு மலையாள படத்தை தான் உடனே பார்க்க வேண்டும் என நடிகர் விஜய் விருப்பப்பட்ட விஷயம், தற்போது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து மலையாள நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஆப்ரகாம் ஓஸ்லர் என்ற மலையாள திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த திரைப்படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் மம்மூட்டி ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். இதுகுறித்து அறிந்த நடிகர் விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயராமிடம் அவரின் படம் பற்றி கேட்டதுடன் மம்மூட்டி நடித்தது பற்றி தெரிந்ததும் அந்த படத்தை நிச்சயமாக பார்க்க வேண்டும் என்றும் விருப்பப்பட்டு கேட்டுள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையை மம்மூட்டி தேர்வு செய்து நடிப்பதால் அந்த படத்தையும் பார்க்க விஜய் விரும்பி உள்ளார். தொடர்ந்து விஜய்க்கு படம் பார்க்கும் வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்துள்ளார் ஜெயராம்.

சக நடிகர்களின் படத்தை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் நடிகர் விஜய் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டது தொடர்பாக ஜெயராம் பேசும் வீடியோ, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.