விஜய் மகனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவின் உச்சகட்ட வளர்ச்சியினை அடைந்துள்ளார்.

முன்னணி வீரர்கள் வருடத்திற்கு ஒரு படம் நடித்தால், விஜய் சேதுபது 5 முதல் 6 படங்கள் என நடித்து அதே அளவு சம்பளத்தினைப் பெற்று விடுகிறார். ஒவ்வொரு நடிகரும் பல ஆண்டுகள் ஆகியும் 25 படங்களை எட்டப் போராடும் நிலையில் மிகக் குறுகிய காலத்தில் அதிகப் படங்களை நடித்தவர் என்னும் பெயருக்குச் சொந்தக்காரரான விஜய் சேதுபதி மாறுபட்ட வேடங்களில் நடித்ததன்மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றார்.


வயதினை மீறிய தோற்றத்தில் நடித்துவந்த விஜய் சேதுபதி தற்போது, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். ரசிகர்களும் இவரது ஹீரோ தோற்றத்தினைவிட வில்லன் தோற்றத்தினையே ரசித்து வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படமானது கொரோனா காரணமாக ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து ஜூன் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி தெலுங்கில் உப்பெண்ணா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய்சேதுபதி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, மேலும் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜயை நடிக்க வைக்க  பேச்சுவார்த்தை நடத்த, அவர் தன் மகன் சஞ்சய்க்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

சஞ்சய் கனடாவில் இருந்து திரும்பியதும் இதுகுறித்துப் பேசி அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடத் தயாராக உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் சஞ்சய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Published by
Staff

Recent Posts