விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சந்திரமுகி ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது ஹீரோவாக மட்டும் அல்லாமல் பல படங்களில் வில்லனாகவும் களமிறங்கி கலக்கி வருகிறார்.

தமிழில் ‘விக்ரம் வேதா’ , ரஜினிகாந்தின் ‘பேட்ட’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் அதை தொடர்ந்து தெலுங்கில் ‘உப்பனா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஷாரூக்கானுடன் ஜவான் படத்திலும், இந்தியன் 2 படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபகத் பாசில் நடிக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து வில்லனாக பல படங்களில் நடித்து வந்தாலும் ஹீரோவாகவும் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்வுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மணிகர்ணிகா (தி குயின் ஆப் ஜான்சி), தலைவி என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். தற்பொழுது தமிழில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் நடிகை கங்கனா மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கவிரும்புவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இன்னும் அறிவிக்கப்படாத இப்படத்தை மலையாள இயக்குநர் விபின் தாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 படங்களில் நடித்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை சித்தாரா!

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம் என கூறப்படுகிறது, மேலும் தயாரிப்பாளர்கள் அதை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.

மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்களை விரைவில் புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...