இது காக்கா இல்ல… ஃபீனிக்ஸ் பறவை…! குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் வர்ற கூட்டம் இல்ல…! தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் லியோ ட்ரைலர் நேற்று (5.10.2023) சாயங்காலம் 6 மணிக்கு வெளியானதுமே கொஞ்ச நேரத்துல யூ டியூப்ல 20 மில்லியனர் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. லியோ ட்ரைலர் விட்டதே விட்டாங்க…. செம மாஸ் அள்ளுது.

சோஷியல் மீடியால எங்கப் பார்த்தாலும் லியோ தான் பேச்சு. படத்தோட ட்ரைலரைப் பற்றி அவரது ஃபேன்ஸ்கிட்ட கேட்டா சும்மா இருப்பாங்களா… ஒவ்வொருத்தரும் ரிவியூல தெறிக்க விட்டுருக்காங்க…. கொஞ்சம் என்னன்னு பார்ப்போமா…

ரத்தம் சொட்டச் சொட்ட அடிச்சிருக்காரு… தளபதி வேற லெவல் வேற லெவல். விஜய் பிரசன்ட்ஸ்ஸே வேற லெவல். சும்மா அள்ளுது. ஜெயிலராவது… பீப் சவுண்ட் தான் இங்க போடணும்.

leo3 1
leo3

leo3 2

லாஸ்ட் சீன் பைட்ல அதிரடி தளபதி மாஸ் காட்டிருக்காரு. பைட்ல கன் விளையாடுது. ஒரே ஒரு சீன் தான் தளபதி கத்துறாரு. சும்மா தியேட்டரே அதிருது. வேற லெவல். மாஸ்டர், கைதி, விக்ரம்னு மொத்த படத்தையுமே பார்க்கலாம். 2000 கோடி வசூலாகும்.

அடுத்த முதல்வர் தளபதி தான். ஆடியோ லாஞ்ச கட் பண்ணா சும்மா விட்ருவாங்களா… உள்ளே போயி பாருங்க.. அங்க வச்சிருக்காரு தளபதி. 18ம் தேதி வரை வெயிட் பண்ணுங்க. அப்ப தெரியும் லியோன்னா யாருன்னு?

இந்த காக்கா கழுகு கதையை சொன்னாங்கல்ல. கழுகு கழுகு தான். அது பறந்து மேலே போகுது. ஆனா அந்த கழுகுக்கு வயசாயிடுச்சு. கண்ணு சரியா தெரில. கீழே காக்கா பறக்குதுன்னு நினைச்சது. ஆனா அது காக்கா இல்ல. ஃபீனிக்ஸ் பறவை.

உள்ளே போயி என் சட்டையைப் பாருங்க. 5 மணிக்கு வந்தேன். சட்டை ஃபுல்லா நினைஞ்சிடுச்சு. காயப் போடணும். என் செருப்பெல்லாம் எங்க இருக்குன்னே தெரியல. எங்கேயோ போயிடுச்சு. (செருப்பைத் தொலைத்ததைக் கூட சந்தோஷமாகச் சொல்கிறார் இவர்.)

உள்ள ஒரே சத்தம். ரெண்டு வாட்டி போட்டாங்க. ரெண்டு வாட்டியும் கேக்கல. செம சவுண்டு, செம தியேட்டரு. வேற லெவல். லாஸ்ட் சீன். கெட் அப் சேஞ்ச். தளபதி வேற லெவல். ஆக்ஷன் கிங், தளபதி எல்லாம் செமயா நடிச்சிருக்காங்க.மூச்சே விட முடியலண்ணா… தலைவர் வெறித்தனமா இருந்தாரு. மரணமாஸ். 19ம் தேதிக்கு வெயிட்டிங்.

செமயா இருக்கு ப்ரோ. கிராபிக்ஸே தெரில ப்ரோ. ஐ.நா.வை செமயா காமிச்சிருக்காங்க. கார் சேசிங் ப்ரோ. ஹாலிவுட் ரேஞ்ச் ப்ரோ. சொல்லத் தெரில ப்ரோ. கன்ன இப்படி பண்ணுவார் ப்ரோ. தேய்ச்சிட்டு இப்படி சுடுவார் ப்ரோ. தளபதி வேற லெவல். ஓவர் ஆல் டென்னுக்கு வந்து 9.5 கொடுக்கலாம் ப்ரோ. ட்ரைலரே வேற லெவல் ப்ரோ.

Leo 2
Leo 2

நோ ஒர்க்ஸ் ப்ரோ. ஒன்லி கூஸ் பம்ப்ஸ் ப்ரோ. குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் வர்ற கூட்டம் இல்ல ப்ரோ. அவரு முகத்துக்காகத் தான் இவ்ளோ கூட்டம் வந்துருக்கு. ஆடியோ லாஞ்ச் இல்லன்னுட்டாங்க. புரொமோஷன் பண்ண உடல. எதையுமே பண்ண உடல. ஆனா இப்ப பாருங்க ப்ரோ. எந்த ஹீரோக்குப் ப்ரோ டிரைலருக்கு இவ்ளோ கூட்டம் வந்துருக்குது? அங்க பாருங்க ப்ரோ…! கேமரா கூட காட்டுது பாருங்க கூட்டத்தை. எந்த ஹீரோக்கு வருவாங்க? ஒன்லி தளபதி.

மொபைல்ல பார்க்கறதுக்கே பயங்கரமா இருக்கு. முக்கால்வாசி ட்ரைலரே நைட் எபக்ட்ல தான் இருக்கு. சூப்பரா இருக்கு. செமயா இருக்கு. தளபதிய எப்படி சொல்றதுன்னே தெரில. எதிர்பார்க்கவே இல்ல. பேசுறதே ரெண்டு டயலாக். ரெண்டுமே வேற லெவல். ஆனா படத்துல வருமான்னு தெரியாது. (வேற ஒண்ணுமில்ல… அது பெண்களை இழிவு படுத்துற வசனம். நிறைய பேரு இதுக்கு முன்னாடி பேசிட்டாங்க… இப்ப தளபதி பேசிருக்காப்ல.)

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...